செய்திகள்பிரதான செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போலிஸ் அதிகாரி கைது.

கொழும்பு – தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரொருவரை பிரதேசவாசிகள் சிலர் இணைந்து பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.

பிரதேசவாசிகள் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்தியுள்ளதால் அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவன் பலி

wpengine

மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்! இருவர் கைது

wpengine

சவூதி அரேபியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள்

wpengine