கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் 13 கிலோ 372 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 80 கோடி பெறுமதியானவையாகும் .
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டிகாவத்தை நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று போதைப்பொருள் விநியோக நிலையமாக இயங்கி வருவதாக மாலபே பொலிஸாருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, மஹர பகுதியைச் சேர்ந்த மொரின் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் பெயர் வெளிவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்