பிரதான செய்திகள்

13 இலட்சத்துக்கும் அதிகமான தொகையினை கோட்டாவுக்கு செலவிடும் அரசாங்கம்!

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்கமைய, செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

wpengine

பம்பலப்பிட்டி மைதானத்தில் ரகர் விளையாட்டு போட்டி! பொலிஸ்மா அதிபர்,ரகர் சம்பியன் மஜித் பங்கேற்பு

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது!

Editor