Breaking
Sun. Nov 24th, 2024

மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஷேக் என அழைக்கப்படும் செல்வந்தர்களால் இந்தியாவில் – ஹைட்ராபாத் பகுதிகளில் பல முஸ்லிம் சிறுமிகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

13 வயதில் இடம்பெற்ற கொடுமையை யுவதி ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்.

அப்போது எனக்கு 13 வயது மாத்திரமே. பூப்பெய்து சில மாதங்களே கடந்திருந்தேன்.

வறுமையில் குடும்பம் வாடியது ஆனால் படிக்க வேண்டும் என்ற எல்லையற்ற ஆசை என்னை நித்திரை கொள்ள விடலில்லை.
திடீரென எனது தாய் என்னிடம் தனியாக உரையாடுகிறாள். இந்த ஆடைகளை அணிந்துக்கொள் என உரத்த குரலில் கட்டளையிடுகிறாள்.
நான் மறுத்தேன் எதற்காக இந்த புதிய ஆடைகள் என கேட்டேன்.

பதிலளிக்காத தாய் விரைந்த தனக்கு புது ஆடைகளை அணிவித்து தந்தையிடம் ஒப்படைத்தார்.

உனக்கு திருமணம்… என கூறியபடி என்னை அழைத்துச் சென்றார் தந்தை.
அறியாதவளாய் விழிநீர் வடிய தந்தையுடன் சென்றேன்.
யாருமற்ற ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கு எனது தந்தைக்கு இணையான வயோதிபர்கள் மூவர் நின்றுக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் தந்தை 25 ஆயிரம் ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டார்.
நான் அவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டேன்.
அன்றைய தினம் அவர்களில் ஒருவருடன் திருமணமும் நிறைவேறியது.

இரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றன.
செவிமடுப்பதற்குள் திருமணமான குறித்த வயோதிபருடன் அனுப்பி வைக்கப்பட்டேன்.

அன்றிரவு துன்புறுத்தப்பட்டேன், பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு ஆளானேன்.
சுமார் மூன்று வாரங்கள் விடுமுறையின்றி பாலியல் பலாத்காரம் புரியப்பட்டேன்.
வாழ்க்கையை தொலைத்து விட்டதாய் உணர்ந்தேன். எதிர்காலம் சிறு வயதிலேயே நிறைவு பெற்றதாய் உணர்ந்தேன்.

என்னை திருமணம் செய்த ஷேக் என்ற செல்வந்தருக்கு 55 வயதாகும்.
அவரின் அனைத்து ஆசைகளும் நிறைவேறியதன் பின்னர் அவரின் முதல் மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் சேவையாற்றுவதற்காக என்னை அனுப்பிவைக்க தீர்மானித்தனர்.
ஜோர்தான் எனும் நாட்டிலேயே அவர்கள் வசித்து வருகின்றனர்.

முழு மனதோடு நான் அதனை மறுத்தேன், உயிரை தியாகம் செய்யவும் திட்டமிட்டேன்,
எனது பெற்றோருடன் மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட்டார் குறித்த செல்வந்த காமுகர்.
மீண்டும் அவர்களிடமிருந்து விடுதலை பெற்றேன். தனிமையாக்கப்பட்டேன்.

பெற்றோரின் துரோகத்தினால் எனது வாழ்க்கையை 13 வயதிலேயே தொலைத்து விட்டேன்.
செவிலியராகுவதே எனது இலட்சியமாக காணப்பட்டது.
ஆனால் என்னால் முடியவில்லை, ஆசிரியை ஆகுவதற்கு திட்டமிட்டேன்.
உருது மற்றும் ஆங்கில மொழிகளை நன்கு கற்றேன், வயோதிபர்கள் மற்றும் கல்வி இடைவிலகள் சமுதாயத்தினை தேர்ந்தெடுத்து கற்பிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தேன்.

மீண்டும் பெற்றோர்களை சந்திக்க சென்றேன், அவர்கள் எனது முகத்தினை பார்ததும் வெட்கி தலைக்குணிந்தனர்.
மன்னிப்பு கோரவும் தகுதியற்றவர்களாக காணப்பட்டனர்.
ஆனால் நான் மன்னித்து ஏற்றுக்கொண்டேன். கல்வி அறிவு இன்மையும் ஏழ்மையுமே என்னை பழிவாங்கியதாக எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன்.

தற்பொழுது ஆசிரியை தொழிலை முன்னெடுப்பதோடு ஷேக் செல்வந்தர்களின் இவ்வாறான செயலை எதிர்த்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன் என கண்ணீர் வழிந்தோட ஏக்கத்துடன் செவ்வியளித்துள்ளார்.
இதற்கு பலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதாகவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தன் உயிர் உள்ள வரை உழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தினை பி பி சியில் இடம்பெற்ற செவ்வியிலே அவர் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *