பிரதான செய்திகள்

12வருடங்களின் பின்பு அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி

அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
12 வருடங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட பொழுதிலும், மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே போல் பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளம் பாரிய பிரச்சினையாக உள்ளது – ரணில்

wpengine

என்னாகுமோ,ஏதாகுமோ! பெரும் அச்சத்தில் ஐரோப்பா!

wpengine

வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் த.சிவபாலன்

wpengine