பிரதான செய்திகள்

12வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை! தந்தை மரணம்,தாய் வெளிநாட்டில்

12 வயது சிறுவனை கொடூரமாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவரின் மூத்த சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , துன்புறத்தலுக்கு உள்ளான குறித்த சிறுவன் , வீட்டின் கதவுக்கு பின்னால் அழுது கொண்டிருந்த நிலையில் காவற்துறையால் மீட்கப்பட்டுள்ளார்.

12 வயதுடைய குறித்த சிறுவனை அவரின் சகோதரர் மற்றும் அவரின ்மனைவி தடிகளில் மற்றும் கூரிய ஆயுதங்களில் தாக்கியுள்ள நிலையில் , சிறுவன் நடக்க முடியாதவாறு அவரின் கால்களில் பெரிய கட்டையொன்று கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் , அவரின் தாய் தொழிலுக்காக வௌிநாடு சென்றுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

சம்பவம் குறித்து காவற்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் 24 வயதுடைய சகோதரர் மற்றும் அவரது மனைவி இணைந்து இந்த கொடுமையை புரிந்து வந்துள்ளமை வௌிச்சத்துக்கு வந்துள்ளது.

பல நாட்களாக இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுவன் சிகிச்சைக்காக கலஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Related posts

அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது!

wpengine

பேஸ்புக் பாவனையாளர்களே! “வைரஸ்“ கவனம்

wpengine

கிழக்கின் எழுச்சி ஒரு பிரதேசவாதம் அல்ல! எமது விதியை நாமே! எழுதுவோம்

wpengine