பிரதான செய்திகள்

12வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய சிலாவத்துறை ஆட்டோ சங்கம் (படம்)

(எஸ்.எச்.எம்.வாஜித்)

வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்ய கோரி மரிச்சுக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் முசலி பிரதேசத்தில் உள்ள கிராமங்களினால் சுழற்சி முறையில் மேற்க்கொண்டு வரும் 12வது நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் சிலாவத்துறை ஆட்டோ சங்கம் இன்று காலை மரிச்சுகட்டிக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளார்கள்.

அதன் தலைவர் கருத்து தெரிவிக்கையில்;

இந்த வர்த்தமானி அறிவித்தல் முழு முசலி பிரதேசத்திற்கும் எழுதப்பட்ட அடிமை சாசணமாக இதனை பார்க்கின்றோம்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவுகளை வழங்கி உள்ளோம் அத்துடன் முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்க உறுப்பினர்களையும், அழைத்து எதிர்வரும் காலங்களில் பாரிய ஆர்ப்பாடங்களையும் நடத்த தீர்மானித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

தாஜூதின் படுகொலை செய்யப்பட்டமைக்கு அவர்கள் தூக்கு மேடைக்கு செல்வார்கள்.

wpengine

சிறையில் வாடும் கைதிகள்! தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் அவரை சென்று பார்வையிடவில்லை.

wpengine

முச்சக்கர வண்டி இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்?

wpengine