பிரதான செய்திகள்

12 மில்லியன் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ள அமைச்சர்! வெள்ளவத்தையில் சண்டித்தனம்.

அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர் பெருந்தொகை மின் கட்டணத்தை செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

வெள்ளவத்தை, சரணங்கர வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் பிரபல அமைச்சரவை அமைச்சரே இவ்வாறு செலுத்தவில்லை என தெரிய வருகிறது.

சுமார் 12 மில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சென்ற மின்சார சபை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைச்சர் செயற்பட்டுள்ளார்.

மின் மாணியை பரிசோதிக்க வந்த அதிகாரிகளை, அமைச்சர் தனது பாதுகாப்புப் படையினர் மூலம் அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related posts

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்

wpengine

புத்தாண்டை கூடாரங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

wpengine

ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு போட்டு

wpengine