பிரதான செய்திகள்

12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 5175 ரூபா

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ​ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறினாரா அட்டாளைச்சேனை முனாஸ்

wpengine

20நிமிடம் மாட்டிக்கொண்ட அமைச்சர் ஹபீர்,மலிக்

wpengine

ஆர். பிரேமதாசா மறைந்து 23வருட நினைவில்! மாதுலுவாவே சோபித்த தேரா் உருவாக்கம்

wpengine