பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

12 புதிய கொவிட் தொற்றாளர்கள்; வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகை தந்த 2 பேருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா கற்பகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகைதந்த நபர் ஒருவருக்கு, திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வருகைதந்த வவுனியா – கற்பகபுரம் பகுதியில் உள்ள சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த இருவரும் என 12 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine

கணவனின் கொடுமை! தற்கொலை செய்த மனைவி

wpengine

வட மாகாணத்தில் இன்று மின்தடை

wpengine