Breaking
Sat. Nov 23rd, 2024
(ஆர்.ஹஸன்)
 அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை நேற்று திங்கட்கிழமை மாலை அவரது அமைச்சில் சந்தித்த சர்வதேச முதலீட்டாளரும், சவூதி அரேபியாவின் இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவுதி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி இளவரசர், திங்கட்கிழமை மாலை அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர்  மலிக் சமரவிக்கிரமவை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கையில் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதுடன், முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
மேற்படி கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *