செய்திகள்பிரதான செய்திகள்

11 நெடுந்தூர சேவை, பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை . .!

நெடுந்தூர சேவைகள் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் நேற்ற (15) கினிகத்தேன பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் கினிகத்தேன அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட ஐந்து அரச பேருந்துகள் மற்றும் ஆறு தனியார் பேருந்துகள் உட்பட 11 சாரதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறைபாடுகளை சரிசெய்ய பல பேருந்துகளின் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துச் சோதனைகளின் போது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் பொலிஸார் தகவல் தெரிவித்தனர். பேருந்து சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.

Related posts

மன்னம்பிட்டிய பஸ் விபத்து நடந்தது என்ன?

Editor

புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் – தோப்பு வீழ்ந்து தோழமையானது..!

wpengine

புத்தளம் மாவட்ட பட்டதாரிகளினால் முன்னால் அமைச்சர் கௌரவிப்பு

wpengine