பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

11 மாத சிசுவின் தொண்டையில் மாதுளை! பரிதாப மரணம்

11 மாதங்களேயான சிசுவின் தொண்டையில், மாதுளை விதை இறுகியமையால், அச்சிசு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று, ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.   

கொக்கரல்ல, அனுஹஸ் சுதுதின பண்டார வன்னிநாயக்க என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.    தனது வீட்டுக்கு முன்பாக இருந்த மாதுளை மரத்திலிருந்து மாதுளம் பழமொன்றை கடந்த 31ஆம் திகதியன்று பறித்தெடுத்த அச்சிசுவின் தாய், வீட்டு முற்றத்திலேயே அமர்ந்து தன்னுடைய குழந்தையை மடியில் கிடத்தி, மாதுளை விதைகளை ஊட்டிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போதே, அச்சிசுவின் தொண்டைக்குள் விதையொன்று இறுகிவிட்டது. அச்சந்தர்ப்பத்தில் மூச்செடுப்பதற்கு திணறிய சிசுவை, ரிதிகம மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துசென்ற போதிலும், அச்சிசு மரணமடைந்துவிட்டது.    மாதுளம் பழத்தின் விதையொன்று தொண்டையில் சிக்கியமையால், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பையடுத்து, மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாகவே அச்சிசு மரணித்துள்துள்ளது என்று, நீதிமன்ற வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யூ டியூப் பார்த்து விமானம் தயாரித்த அதிசயம்

wpengine

தென்கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

wpengine

அமைச்சர் றிஷாட்டை ஒழிக்க டயஸ்போரவுடன், சில முஸ்லிம் அரசியல்வாதிகள்

wpengine