பூசா சிறைச்சாலையில் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தக் கொலையை சிறைத்தண்டனை கைதி ஒருவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர் சிவா என்பவர் எனவும், அவரது உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.