பிரதான செய்திகள்

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள தேசிய பாடசாலையைச் சேர்ந்த 11 வயது­டைய மாணவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதி­மன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரான ஆசிரியரை நீர்கொழும்பு பதில் நீதிவான் சந்த நிரிஹெல்ல 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.

கொட்டதெனியாவ பிரதேசத்தில் வசிக்கும் விஞ்ஞான பாட ஆசிரியரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.

கடந்த 15 ஆம் திகதி தரம் ஆறில் கற்கும் மாண­வர்கள் சிலருக்கிடையில் நண்பகல் வேளையில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்­ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அதனை விசாரிக்க சென்ற வேளையில் குறித்த மாணவனின் கன்னத்தில் அறைந்­துள்ளார்.

இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் நீர்­கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நப­ரான ஆசிரியர் கைது செய்யப்பட்டு புதன்­கிழமை மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே சந்­தேக நபரை பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு அடுத்த வருடம் (2018) ஜனவரி மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்

wpengine

மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்!

Editor

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல்

wpengine