கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளைய தினம் திறக்கப்பட உள்ளன.
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.
இதனடிப்படையில் பாடசாலைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தர மாட்டார்கள்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளைய தினம் பாடசாலைகளுக்கு வரவழைக்கப்பட உள்ளதுடன், இவர்களின் தலையீட்டில் ஒரு வாரம் பாடசாலைகளில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் பின்னர் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பது குறித்து எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்மானிக்கப்பட உள்ளது.
அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் விதத்திலேயே கத்தோலிக்க பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கத்தோலிக்க கல்விப் பணிப்பாளர் ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.