100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள சியல்கோட் வர்த்தக சமூகம் சேகரிக்கப்பட்ட 100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட போது பணிபுரிந்த ராஜ்கோ நிறுவனத்தில் இருந்து பிரிந்த குமாரவின் மாதாந்த சம்பளமான, 2000 அமெரிக்க டொலர்களையும் அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரியந்த குமாரவின் மனைவிக்கு 10 வருடங்களுக்கு இவ்வாறு சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares