பிரதான செய்திகள்விளையாட்டு

1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டு டெஸ்ட்டில் மொய்ன்அலி 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இதில் மொய்ன்அலி சாதனை படைத்து உள்ளார். ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட் எடுத்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் போத்தம் 13 டெஸ்ட்டில் விளையாடி 1095 ரன்னும், 47 விக்கெட்டும் எடுத்தார்.

2-வதாக தென்ஆப்பிரிக்க அணி வீரர் காலிஸ் 2001-ம் ஆண்டு 14 டெஸ்ட்டில் 1120 ரன், 35 விக்கெட் எடுத்தார்.

தற்போது 3-வது வீர ராக மொய்ன்அலி இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

மேலும் இந்த ஆண்டில் 1000 ரன்னை கடந்த 5-வது வீரர் மொய்ன்அலி ஆவார்.

இங்கிலாந்தின் ஜோரூட் (1477 ரன்), ஜானி பேர்ஸ் டோவ் (1470), அலக்ஸ்டர் குக் (1270), இந்திய கேப்டன் வீராட்கோலி (1215) ஆகியோர் ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.

Related posts

இரண்டு முகக் கவசங்கள் அணிவது பொறுத்தமற்றது வைத்தியர் ரஞ்சித்

wpengine

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம்!

Editor

வாய்கால் அமைக்க வழியில்லை எவ்வாறு பாலம் அமைப்பது? நாமல் (விடியோ)

wpengine