(அஷ்ரப். ஏ சமத்)
மேல் மாகாண சபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜி கொழும்பு மத்திய தொகுதியில் வாழும் மூவினங்களையும் சாா்ந்த பாடசாலை மாணவ மாணவிகளுகளது கல்வி நடவடிக்கைகளுக்கும் மற்றும் வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்களை இனம் கண்டு அவா்களுக்கு சுயதொழில் முயற்சிக்ளுக்கு கடந்த 10 வது வருடங்களாக தொடா்ச்சியாக உதவி வருகின்றாா்.
நேற்றும் (22) கொழும்பு மத்திய பிரதேசத்தி்ல் வாழும் 1000 மாணவ மாணவிகளை அழைத்து ஒவ்வொருவருக்கும் 1500 ருபா பெருமதியான பாடசாலை உபகரணங்கள் கொண்ட பொதிகள் குணசிங்க புர பிரதீபா மண்டபத்தில் வைத்து பகிர்ந்து அளித்தாா்.
இந் நிகழ்வில் அவரது புதல்வா் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாசில் பைருஸ் இ பிரதி மேயா் எம். ரீ. இக்பால், மேல் மாகணசபை உறுப்பிணா் மொஹமட் அக்ரம், கித்துல் பிட்டிய, மன்சூ அரங்கல ஜோஜ் பேரேரா உட்பட பாடசால அதிபா்கள் பெற்றோா்கள் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா்களும் கலந்து கொண்டு இப் பொருட்களை மாணவா்களுக்கு பகிர்ந்தளித்தனா்.
இங்கு உரையாற்றிய பைருஸ் ஹாஜி
கொழும்பு மத்திய தொகுதியில் வாழும் வருமானம் குறைந்த மக்களை அடையாளம கண்டு அவா்களுக்கு கடந்த 10 வருடங்களாக தொடா்ந்து உதவி வருகின்றேன். நான் ஒருபோதும் அரசாங்க நிதியையோ அல்லது அரச கட்டிடங்கள் ஒப்பந்தம் செய்து அந்த நிதியை எடுத்து ஏழை எளிய மக்களுக்கு உதவ வில்லை எனது சொந்த தொழில் முயற்சியில் வருகின்ற வருமானத்தில் ஒரு தொகை நிதியையே இப் பிரதேச மக்களுக்கு உதவி வருகின்றேன்.
நான் இந்த மக்களோடு மக்களாகவே கடந்த 15 வருடங்களாக இருந்து கொண்டு கடந்த என்னால் என்ன உதவிகளை இவா்களுக்குச் செய்ய முடியுமோ அதனை செய்து வருகின்றேன். அதனால் அந்த மக்கள் தெடா்ந்தும் என்னுடனே உள்ளாா்கள் அதே போன்று அம் மக்களின் விருப்பபடி எனது மகனையும் மக்கள் பிரநிதியாக்கி அவரால் என்ன உதவிகளை இந்த மக்களுக்குச் செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகின்றாா்.
எனது மகனை லண்டன் அனுப்பி படிப்பித்தேன் அவா் அங்கு குளிருட்ட அரைகள் இருந்து தொழில் செய்ய முடியும் அவரதும் எனது விருப்பப்படி அவரை வரவழைத்து இந்த மக்களுடன் இருந்து அவரால் முடியுமான உதவிகளை கொழும்பு மத்தியில் செய்வதற்காகவே கொழு்ம்பு மநாகர சபையின் மக்கள் பிரநிதியாக்கியுள்ளேன்.
ஆகவே நான் ஒரு போதும் உதவுவது உங்களது வாக்குகளுக்காக வோ அல்ல.து பிரதிஉபகாரத்திற்கு அல்ல. எனது காலம் சென்ற எனது பெற்றோா்களுக்கும் உங்களது துஆக்கள் பரக்கத்துக்கள் கிடைத்தால் மட்டும் போதும். என பைருஸ் ஹாஜி அங்கு உரையாற்றினாா்.