மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம் ஏற்படுவதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் ஊழல்,மோசடிதான் என்பதில் சந்தேகமில்லை.
மக்கள் வாழ்கின்ற இடத்தைத் தேடிப் போய் குவிக்கப்பட்ட குப்பைகள் அவை என்பதால் அந்தக் குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததை இயற்கை அனர்த்தமாக எற்க முடியாது என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.உண்மையும் அதுதான்
இதனால் அந்தப் பகுதி மக்கள் அரசியல்வாதிகள்மீது கடுப்பாகவே உள்ளனர்.மஹிந்த ஆட்சியில் அந்தக் குப்பைகள் கொட்டப்பட்டதால் மஹிந்த அணி எம்பிக்கள் அந்த மக்களைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் மக்கள் அவர்கள்மீது பாயவே செய்தனர்.அப்படித்தான் பாவம் உதய கம்மன்பிலவும் அவர்களிடம் சிக்கினார்.
ரூபா தாங்க போதும்”.என்றார்.
இதனால் கம்மன்பில வெட்கப்பட்டு அசடு வழியத் தொடங்கினார்.100 ரூபா கேட்டதும் ஏன் அசடு வழிந்தார் என்று தெரியுமா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தேர்தல் செலவுக்காக இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் 100ரூபா கேட்டிருந்தார்.செலவழிப்பதற்கு