முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 பௌத்த பிக்குகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பொதுமக்களையும் பௌத்த பிக்குகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 100 பௌத்த பிக்குகளும், ஆயிரம் பொதுமக்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். ஒரு பௌத்த பிக்குவிற்கு 10 பொதுமக்கள் என்ற ரீதியில் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.
இந்தப் பணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் தாமகவே முன்வந்து தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.