செய்திகள்பிரதான செய்திகள்

 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம்..!

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது. 

அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 

இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Related posts

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

wpengine

மாகாண சபைக்கு சஜித்திடம் தஞ்சமடையும் ரவி,தயா

wpengine

க.பொ.த.சாதாரண தரம் தேவையில்லை! உயர் தரம் கற்க

wpengine