100 வயதை அண்மையில் பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜையினை கௌரவித்த ஏ.ஸ்ரான்லி டிமெல்

சர்வதேச சிறுவர், முதியோர் தினமான நேற்று சனிக்கிழமை(1) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வசித்து வரும் நூறாவது (100) வயதை அண்மையில் பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜையான மனுவேல் சந்தான் என்பவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ‘மாறிவரும் உலகில் மீள் உய்கை மிக்க சிரேஷ்ட பிரஜைகள்’ எனும் தொனிப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடிய மனுவேல் சந்தான் என்ற மூத்த பிரஜையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் நேற்று சனிக்கிழமை(1) காலை நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பண பரிசு வழங்கி கௌரவித்தது,குறித்த சிரேஷ்ட பிரஜை இடம் ஆசி பெற்றார்.

இதன் போது மன்னார் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.செந்தில் குமார்,பங்குத்தந்தை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செம்மன்தீவு பகுதியில் அமைக்கப்பட உள்ள முதியோர் பகல் நேர நிலையத்திற்கான அடிக்கல்லை அரசாங்க அதிபர் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares