வெல்லவ, மரலுவாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொருத்தமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் வழங்குபவர்களின் விபரம் மற்றும் அடையாளம் இரகசியமாக பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவின் தீர்மானத்தின்படி, பொலிஸ் வெகுமதி நிதியத்தின் ஊடாக இந்த சன்மானம் வழங்கப்படும்.
கடந்த 2024 டிசம்பர் 24 ஆம் திகதி டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரலுவாவ பகுதியின் வசாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபரொருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மற்றும் குருணாகல் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பான எந்தவொரு பொருத்தமான தகவலையும் பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.
071 – 8591244 – குருணாகல் பிரிவு பொறுப்பதிகாரி
071 – 8591882 – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்