பிரதான செய்திகள்

10வது நாள் போராட்டம்! முள்ளிக்குளம் மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாட்

மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான சுமார் 980 ஏக்கர் விஸ்தீரனம் கொண்ட காணியை விடுவித்துத்தர வேண்டும். என கோரி அந்த பிரதேச மக்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (01) சந்தித்து நிலமைகளை கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின் போது முன்னால் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னனியின் தலைவருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் அலிகான் சரீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

 

Related posts

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

wpengine

ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் யாழ் வழங்கி வைப்பு

wpengine

புத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6

wpengine