Breaking
Sat. Nov 23rd, 2024

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விண்ணப்பிக்கும் சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது அவசியமாகும், விடுமுறையின் கால எல்லை சேவை தளத்திற்கும் வாக்களிப்பு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக தேர்தல் செயலகம் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள தேர்தலின் போது தொழில் புரியும் ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக தமக்குரிய உரிமை மீறப்பட்டு இருப்பதாக தேர்தல் மகிந்த தேசப்பிரிய இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்கெடுப்பின் போது வாக்களிக்க உரிமையுள்ள தமது ஊழியர்களுக்கு சட்டத்தின் கீழ் உரிமையுள்ள விடுமுறையை தனியார் மற்றும் அரசாங்க தொழிற்துறையிலுள்ள ஊழியருக்கு வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.

இதன்போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும், அவ்வாறு வழங்கப்படாத விடத்து தொழில் வழங்குநர் குற்றவாளி ஆவதுடன், நீதவான் ஒருவரினால் சுருக்க முறை விளக்கத்தின் பின்னர் தீர்ப்பளிக்கப்படுமிடத்து தொழில் வழங்குநருக்கு 500 ரூபாவிற்கு மேற்படாத தண்டப்பணத்திற்கு அல்லது ஒருமாத காலத்திற்கு மேற்படாத காலத்திற்கான இரு வகையில் ஒருவகை சிறைதண்டனைக்கு அல்லது தண்டப்பணம், சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தை ஊழியர் தொழில் புரியும் இடத்தில் இருந்து அவரது வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவும் அங்கிருந்து திரும்பி வரவுள்ள தூரத்தை கருத்தில் கொண்டு வேலைக்கொள்வோர் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *