பிரதான செய்திகள்

10வயது ஷாக்கிர் ரஹ்மான் மீது ஆசிரியர் தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில்

(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில்  தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் பிரத்தியேக வகுப்பு நடத்திய சந்தர்ப்பத்தின் போதே ஆசிரியை மாணவனை தாக்கியுள்ளார்.

ஷாக்கிர் ரஹ்மான் (வயது 10) எனும் மாணவனே இவ்வாறு ஆசிரியையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2)

குறித்த மாணவன் இவ்வாண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

Related posts

உப்புக்குளம் கிராமத்தில் ஒருவருக்கு PCR பரிசோதனை! குடும்பம் தனிமைப்படுத்தல்

wpengine

புத்தளம் உழ்ஹிய்யா விடயம்! காட்டுமிராண்டி தனமாக நடந்துகொண்ட பள்ளிவாசல் செயலாளர்! ஊர் மக்கள் கண்டனம்

wpengine

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்!

Editor