சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 01 ஏக்கர் நிலப் பரப்பளவில் பயிரிடப்பட்ட 12,000 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கும்புக்வெவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.