பிரதான செய்திகள்

ஹோட்டலில் ஊழியரை தாக்கிய பாலித தெவரபெரும (விடியோ)

காலி, தெவட பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு வந்த பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும அங்குள்ள ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதியமைச்சர் கடுமையான வார்தைகளால் திட்டி நேற்று பிற்பகல் தன்னை தாக்கியதாக குறித்த ஊழியர்  தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தான் தாக்கவில்லை என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் பிரதி அமைச்சர் மீண்டும் காலி துறைமுக காவற்துறை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் குறித்த ஹோட்டலுக்கு சென்று அதன் தரம் பற்றி சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் போது அவருடன் வந்த குழுவுடன் ஹோட்டலின் பின்பகுதிக்கு சென்று வடிகால் அமைப்பை சோதனை செய்துள்ளனர்.

வடிகால் அமைப்பு மற்றும் ஹோட்டலின் சமையல் அறையும் ஒன்றாக அமைந்திருந்தமை அப்போது தெரியவந்துள்ளது.

எனினும் இதன்போது பிரதேசவாசிகளில் சிலர் பிரதி அமைச்சருக்கு ஆதரவாகவும், மேலும் சிலர் எதிராகவும் செயற்பட்டனர்.

Related posts

அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்த கல்வி அமைச்சர்

wpengine

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதமளவில் நிறைவடைவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவிப்பு!

Editor

’தேர்தல் காலத்தில் துரோகிகளாக முத்திரை குத்தப்படுவோர் பின்னர் சமூகக் காவலரென போற்றப்படுகின்றனர். – பட்டிருப்பில் ரிஷாட்

wpengine