கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஹூனைஸ் முழு பூசனிக்காயினையும் சோற்றில் மறைத்து அமைச்சர் றிசாத் மீது போலி குற்றச்சாட்டு

வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற
போது ஏன் அமைச்சர் றிசாத் பதியுதீன் அதனை குழப்பியடிக்க வேண்டும் என்று
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ள கருத்து
தொடர்பில் உண்மையினை நன்கறிந்த ஒரு போதும் மௌனமாக இருக்கமாட்டார்கள்
என்பதை ஹூனைஸ் பாருக்குக்கும் அவரை நம்பி ஏமாந்து போயுள்ள முஸ்லிம்

காங்கிரஸ்காரர்களுக்கும் சொல்ல வேண்டிய தேவையுள்ளது.

ஹூனைஸ பாருக்  அவரது முதலாவது பந்தியில் ஆரம்பித்துள்ள  கேள்விக்கான
பதிலை அவரே தெரிவிக்க வேண்டும் .

கடந்த பல வருடங்களாக இந்த முசலி பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைசசர் றிசாத் பதியுதீன் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஹூனைஸ் பாருக் அறியாதவர் போலும்,இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாத நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலி பிரதேச செயலகத்தில் 27 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்ததை குழப்ப ஒன்றும்
தெரியாதவர்களை ஏன் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியினை
தொடுத்துள்ளது,நியாயமான கேள்வி தான்,ஏனெனில் ஹூனைஸ் பாருக் பாராளுமன்றம்
வந்தது மாயா ஜால மந்திரங்களால்,அது மட்டுமல்ல அமைச்சர் றிசாத் பதியுதீன்
தொடர்பில் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் மூலம் கூறியவைகளை
மறந்துவிட்டாரா என்ற கேள்வியே எம்மல் எழுகின்றது.

இன்று முசலி மக்களது இந்த மண் மீட்பு போராட்டத்திற்கான நல்ல முடிவுகைக்கு வர தயாராக இருந்த வேளை இந்த மண்ணுக்கு தொடர்பில்லாத பாராளுமன்ற
உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,பைஸல் காசிம்,தௌபீக், உள்ளிட்டவர்கள்
வருகைத்தந்து புதிய கண்டுபிடிப்பினை செய்தது போல வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளிடத்தில் இருந்து என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் றிசாத் பதியுதீன்,ஆசாத் சாலி,பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,சிவில் அமைப்புக்கள்,ஜமிய்யத்துல் உலமா உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இரு வாரங்களுக்குள் இந்த பிரச்சினை
தீரக்கப்படும் என்று செயலாளரினால் வழங்கப்பட்ட உறுதி மொழியினை நடை
முறைப்படுத்த  முன்னரே,அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீண்டும் ஜனாதிபதி
செயலாளரை சந்தித்து 27 ஆம் திகதி முசலிக்கு சென்று நிலைமையினை ஆராய்ந்து
பார்த்து அதன் பின்னர் முடிவு எடுப்போம் என்று கூறியதினால் தான் இந்த
முசலி மக்களது இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமல் போனது என்பதை ஹூனைஸ்
பாருக்,முழு பூசனிக்காயினையும் சோற்றில் மறைத்து அமைச்சர் றிசாத்
பதியுதீன் மீது இல்லாத பொல்லாத அநியாயங்களை சொல்லுவதில் இருந்து
வங்குரோத்து அரசியலின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளமுடிகின்றது.

வன்னி மக்களின் வாக்குகளை இந்த ஹூனைஸ் பாருக்கிற்கு பெற்றுக் கொடுத்து
எவ்வித செலவுகளுமின்றி அவரை பாராளுமன்ற  உறுப்பினராக
ஆக்கியதுடன்,பாராளுமன்றம் செல்வதற்கும்,தேவையான அனைத்து உதவிகளையும்
செய்தது மட்டுமல்லாமல் மஹிந்த அரசாங்கத்தில் வன்னி மாவட்ட பிரதேச
அபிவிருத்தி குழுக்களின் தலைவர் பதவியினையும் ஹனைஸ் பாருக் அவர்களுக்கு
பெற்றுக்கொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தான்,இன்று அமைச்சருக்கு
எதிராக முசலி விடயம் தொடர்பில் விரல் நீட்டும் ஹூனைஸ் பாருக் அதனை அவரால்
செய்திருக்க முடியும் தானே,தனக்கு ஒரு நியதி மற்றவர்களுக்கு மற்றுமோர்
நியதி என்ற தோரணையில் ஹூனைஸ் பாருக் கூறுவது அவரின் மன நிலையின்
வெளிப்பாட்டினை கண்டு கொள்ளமுடிகின்றது.

முசலி மக்களின் மீள்குடியேற்றம் ஆரம்பித்ததன் பின்னர் தான் 2012 ஆம் ஆண்டு வர்த்தமனி தொடர்பில் இந்த ஹூனைஸ் பாருக் உட்பட அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் அறிந்துள்ளார்
என்பதை எல்லோரும் நன்கறிவர்.மஹிந்தவின் மகனை அனுகி தனக்க பிரதி அமைச்சர்
கேட்க முடியுமாக இருந்தால் இந்த ஹூனைஸ் பாருக் அவர்களுக்கு முசலி மக்களது
வர்த்தமாணி தொடர்பில் கேட்க முடியாமல் இருந்தமைக்கு என்ன சொல்வது.

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு  முசலி பிரச்சினை
தொடர்பில் அமைச்சர் றிசாத் அமைச்சரவையில் பேசாமல் இருந்தது ஏன் என்ற
கேள்விக்கு பதில் கோறியிருக்கும் ஹூனைஸ் பாருக்குக்கு என்ன பதில்
தேவைப்படுகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீனை மட்டும் குறி வைத்து பேசும் உங்களைப்போன்று  நரம்பற்ற நாக்குண்ணிகளை எண்ணி என்ன சொல்வது,வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவையிலும்,பாராளுமன்றத்திலும் பேசியதை பட்டியல் போட்டு கூறலாம்,வன்னியான் அல்லாமல் பொறத்தியான் கேட்டிருந்தால் அதனை
கொடுக்கலாம்,இம்மக்களது வாக்கினால் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்த
உங்களைப்போன்றவர்களுக்கு இந்த பதில் நிர்வாணமாக ஒடச் செய்யும் என்பதால்
வெட்கப்பட்டு பதிலளிக்க மறுக்கிறது எனது விரல்கள்,அமைச்சர் ராஜித
சேனாரதன்,பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இது தொடர்பில் தெளிவாக
கூறியதும்,பகிரங்க தொலைக்காட்சி விவாதங்களில் அமைச்சர் தோன்றி
வில்பத்துக்கும் மீள்குடியேறியுள்ள மக்களுக்கும் எவ்வித
தொடர்புமில்லை.

இம்மக்கள் இவர்களது பூர்வீக காணிகளில் தான் குடியேறுகின்றார்கள் என்று தெரிவித்துவந்ததை கூட அறியாத அரசியல் சூரனாக ஹூனைஸ் பாருக் இருப்பது முசலிக்கு கிடைத்த சாபக்கேடாகவே பார்க்க தோனுகின்றது.பொட்டனி வியாபாரியாக தேர்தல் காலங்களில்  வந்து
போகும்,முஸ்லிம் கங்கிரஸ் காரர்களின் குட்டையில் இறங்கியதால் ஹூனைஸ்
பாருக் இப்போது பப்படம் பொறிக்க ஆரம்பித்துள்ளார்.முசலி பிரதேச செயலாளர்
திருவாளர் கேதீஸ்வரன் அவர்களுக்கு உள்ள உணர்வு கூட  இவருக்கு வராததன்
நோக்கத்தினை எல்லோராலும் உணர முடிகின்றது.

மக்களால் தோற்கடிக்கப்பட்டதன் பிரதான காரணம் அமைச்சர் றிசாத் பதியுதீனின்
தயவால் பாராளுமன்றம் சென்று அவருக்கு துரோகமிழைததவர் என்பதால் என்பதை
அறிந்து கொண்ட ஹூனைஸ் பாருக்,அமைச்சர் றிசாத் பதியுதீனை அரசியலில்
இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்று துடிக்கும் அரசியல் சாணக்கிய தலைவனின்
கையாளாக மாறி இன்று அந்த கொன்தராத்துக்கு சோரம் போன் மக்களை காட்டிக்
கொடுத்த இந்த ஹூனைஸ் பாருக்கின் அரசியலின் அழிவினையே இப்போது
காணமுடிகின்றது.

தமது மண்ணினை சார்ந்த எவரும் இவருக்கு ஆதரவு இல்லை என்பதால் கூலிக்கு மாறடிக்கும் சம்மாந்துறை இக்பால் என்ற காசுக்கு சோரம் போய் பொய்களை உண்மைக் கதையாக எழுதும் நடிகக் கூட்டணியின் கேவலம் கெட்டவனை வைத்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு சவால்விட எழுத வைக்கும் இழி நிலையினை இறைவன் ஏற்படுத்தி கொடுத்துள்ளான் இந்த ஹூனைஸ் பாருக் அவர்களுக்கு. அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல
தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும்,கணிசமான சிங்கள மக்கள் மத்தியிலும்
ஜனரஞசக நிலையினை அடைந்துள்ளதை தாங்கிக்கெள்ள முடியாத நிலையில் உள்ள
மு.காவினர்,முசலிக்குள் இறங்கி மக்கள் பி்ரச்சினையினை தீர்க்கப்
போகின்றார்களாம் என்று படம் காட்டும் நகைச்சுவையாளர்களாக
மாறியுள்ளனர்.

ஹூனைஸ் பாருக் போன்றவர்கள் எத்தனை பேர் வெளிவந்தாலும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் எந்த விமர்சனங்களையும்,பொய்கைகளையும் சொன்னால் இன்று 33 நாட்களாக போராடும் மறிச்சுக்கட்டி மக்கள் உண்மையினை அறிந்துள்ளதினால் தான் முஸ்லிம்
காங்கிரஸ் முன்னெடுக்க முற்பட்ட படத்திற்கு சந்தர்ப்பம் வழங்கமால்
விரட்டியடித்துள்ளனர்.

அம்மக்களது பிரச்சினை தொடர்பில் அறியாத நவவி உள்ளிட்ட பலர் அங்கு அமைச்சர் றிசாத் பதியுதீனினால் அனுப்பப்பட்டு முசலி பிரதேச செயலக கூட்டத்தினை குழ்பியதாக கூறும் ஹூனைஸ் பாருக்,அவருடன் வந்தவர்கள் யார் என்பதை கூறவில்லையே,நவவி அவர்கள் உங்களைப்போன்ற அகதிகள் புத்தளம் வந்த போது வாழுவதற்கு உதவி செய்த புத்தளத்தின் மைந்தன்,இதனை மறந்து உண்ட வீட்டுக்கு வஞ்சம் செய்யும் ஹூனைஸ் பாருக் போன்ற நன்றி
கெட்டவர்களுக்கு புத்தளம் சமூகம் ஒரு மிடக்கு தண்ணீர் கொடுத்தாலும் இன் அது பாவமாகும்.
அமைச்சரின் றிசாத் பதியுதீன் அவர்களின் வளர்ச்சியால் நெஞ்சு வெடித்து
போயிருக்கும்  இவர்களது எந்த நடவடிக்கையும் வெற்றியளிக்காது.ஏனெனில்
துாய்மையற்ற உள்ளத்தில் ஒரு  போதும் இறைவன் வெளிச்சத்தை கொடுக்கமாட்டான்
என்பது கண்டறிந்த உண்மையாகும்.

தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா

Related posts

கிண்ணியா தள வைத்தியசாலையினை தரம் உயர்த்த வேண்டும்! இளைஞர்கள் போராட்டம்

wpengine

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு

wpengine

மன்னாரில் சுனாமி பேரலை 14ஆண்டு நினைவு

wpengine