பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்திய சுதந்திர கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்றைய தினம் செலுத்தியுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சரின் தலைமையில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் சுபைர் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்-குர்ஆனை வைத்து பூஜை செய்த சக்தி தொலைக்காட்சி! பல கண்டனம்

wpengine

இஸ்லாத்தை கேவலப்படுத்தினால் அது நல்ல செயல் என பிரதமர் நினைக்கிறாரா?

wpengine

காத்தான்குடி நீர் ஓடையில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 3அடி முதலை மட்டு-வாவியில் விடுவிப்பு

wpengine