பிரதான செய்திகள்

ஹிருணிக்கா – பந்துல பாராளுமன்றத்தில் விவாதம்

அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றிற்கு ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பாகவும், மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் ஹிருணிகா இன்று வேண்டுகோள் விடுத்ததோடு,

தொடர்ந்து ஹிருணிகா உரை நிகழ்த்தும் போது பந்துல குணவர்தன இடையில் பேசவிடாமல் தர்க்கம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் சற்று கடுமையான விவாதம் ஏற்பட்டது.

இதன் போது ஆத்திரமடைந்த ஹிருணிகா “நான் பெயர் குறிப்பிட்டு எவரையும் கூறவில்லை. ஊழல் தொடர்பில் விசாரணைகள் முறையாக இடம் பெற வேண்டும் என்றே தெரிவித்தேன், ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் தங்களுக்கு பாதையில் இறங்கி நடக்க முடியாமல் போகும் எனவே எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்” என ஹிருணிக்கா பந்துல குணவர்தனவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பந்துல குணவர்தனவிற்கு விவாதிக்கும் வாய்ப்பு சபாநாயகரால் இரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து நிதி மோசடிகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவற்றை நேர்மையான முறையில் விசாரணைகள் செய்யப்படவேண்டும் எனவும் ஹிருணிக்கா தெரிவித்திருந்தார்.

Related posts

சம்மாந்துறையில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண் கைது

wpengine

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப்

wpengine

பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை! நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

wpengine