உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஹமாஸ் போராளிகள் மீது வான் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததோடு 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து பாலஸ்தீனம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.மேலும் பாலஸ்தீனத்தின் காசா நகரிலிருந்து ஹமாஸ்  இஸ்ரேல் பகுதிகள் மீது ராக்கெட்டுகளை வீசினர்.

இதனைத் தொடர்ந்து ஹமாஸ் தளங்களை குறிவைத்து நேற்று  இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது இதில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

கடந்த 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள் வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந் நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதனைத் எதிர்த்து ஆயிரக்கணக்கான பாலத்தீனிய ஆதரவாளர்கள் ஜோர்டான், எகிப்து, ஈராக், துருக்கி, ஈரான், துனிசியா ஆகிய நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பு!

Editor

முசம்மில் மீது மரிக்கார் குற்றச்சாட்டு! குப்பைகள் அகற்றவில்லை

wpengine

பொட்டு அம்மன் வெளிநாடு வாழ்கின்றார் கருணா பேட்டி

wpengine