உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஹஜ் கடமைக்காக எல்லையினை திறக்க உள்ள மன்னர் சல்மான்

கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாத இயங்களுக்கு உதவி செய்வதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து, பஹ்ரைன், ஏமன் உள்ளிட்ட 6 அரேபிய நாடுகள் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தன. வளைகுடா நாடுகளுக்கிடையே இந்த விவகாரம் இன்னும் தீராத நிலையில், குவைத், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.

சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா, மதினாவுக்கு ஆண்டு தோறும் கத்தாரிலிருந்து யாத்ரீகர்கள் வருவது வழக்கமான ஒன்று. தற்போது, இரு நாடுகளுக்கிடையே உள்ள பிளவால் கத்தார் யாத்ரீகர்களை சவூதி அனுமதிக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கத்தாரைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகளுக்காக அந்நாட்டுடனான எல்லையை திறக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக சவூதி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து விமானங்கள் மூலம் யாத்ரீகர்களை அனுமதிக்கவும் சவூதி முடிவு செய்துள்ளது.

முன்னதாக, தங்களது நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கத்தார் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிகிச்சை பலனின்றி ஒட்டமாவாடி இளைஞன் விபத்தில் மரணம்

wpengine

500 கோடி அளவில் மோசடி! கணவன் தனது மனைவியால் படுகொலை

wpengine

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine