பிரதான செய்திகள்

ஹசன் அலியின் காலில் மண்டியிடும் ரவூப் ஹக்கீம்! மீண்டும் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பின் பெயரில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொதுத்தேர்தலின் போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக ஹசன் அலி தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாக சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மாதம் கண்டியில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் கட்சியில் வந்து சேருமாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அளுத்கம இனக்கலவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்;ஹிஸ்புல்லாஹ்

wpengine

வன்னியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற றிஷாட் பதியுதீனை அடிக்கடி கொழும்புக்கு வரவழைத்து விசாரணை

wpengine

இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தமது தாய் நாட்டுக்கு துரோகமிழைத்ததில்லை

wpengine