(இப்றாஹீம் மன்சூர்- கிண்ணியா)
மு.காவின் ஏற்பாட்டில் வன்னியில் இடம்பெற்ற வன்னியின் ஒளி நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தன்னை மு.காவுடன் இணைந்து தேர்தல் கேட்க அமைச்சர் ஹக்கீம் அழைத்ததாக கூறியிருந்தார்.
இது சிலருக்கு சாதாரணமாக தோன்றலாம்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவ்வளவு பலம் பொருந்தியவரல்ல.அவரை அமைச்சர் ஹக்கீம் அழைப்பதென்பது அமைச்சர் ஹக்கீம் தன்னிடத்தில் இருந்து இறங்கிவிட்டதை அழகாக கூறுகிறது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்கை அமைச்சர் ஹக்கீம் அழைத்திருந்தாலும் தலைமைத்துவத்தின் மானம் காக்க அதனை மறைத்து கதைக்க வேண்டியது அவரது கடமையாகும்.
அதில் உரையாற்றிய ஹுனைஸ் பாறூக் சில உண்மைகளை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தன்னுடன் இருந்தவர்களும் இப்போது அமைச்சர் றிஷாத்துடன் இருப்பவர்களுடனும் கேட்டால் தெரியும் எனக் கூறுகிறார்.அதாவது இவரோடு கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இருந்தவர்கள் கூட இன்று அமைச்சர் றிஷாத்துடன் இணைந்துவிட்டார்கள்.அப்படியானால் இவர்களுடன் இருப்பவர்கள் யார்? யாருமில்லை.அது தான் அவர் மு.காவுடன் வந்து இணைந்துள்ளார்.