கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்

(சிபான்,மருதமுனை)

காலாதிகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் முஸ்லிம்களை பலியெடுக்க தவறுவதில்லை. இன்று பரவலாக மாவனல்லை கலவரம் தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் அஷ்ரப் மரணமடைந்து ஹக்கீம் தலைவராக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிற்பாடு , மாவனல்லை சிங்கள முஸ்லிம் முறுகல் நிலை அன்றைய சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் 2001, மே மாதமளவில் கச்சிதமாக அரங்கேறியது.முஸ்லிம்களுக்கு உயிரிழப்பும் சொத்திழப்பும் உண்டானது.

தனது பதவியின் தொடக்க காலத்தில் இவ்வாறான துரதிஸ்டத்தினை சந்திக்க நேர்ந்ததன் விளைவாக ,பேரம் பேசும் சக்தியாக இருந்த மு.கா வை கலவரத்துக்காக அம்மையாருடன் முரண்பட்டுக் கொண்டு அரசில் இருந்து வெளியேறும் சாணக்கியமான முடிவை எடுத்தார் ஹக்கீம். அன்றைய காலகட்டத்தில் தலைவரின் முடிவை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் வரவேற்றிருந்தனர். அன்றைய முடிவுக்காக நமது வாழ்த்துக்களும் உரித்தாகுவதாக.

இன் நிலையிலேயே ஹக்கீம், “ரணில் சாரதியாக இருக்கும் வாகனத்தில் நான் ஒரு போதும் ஏறப்போவதில்லை” என்ற பெருந்தலைவரின் வசியத்தினை மீறுகிறார்.ஆனால் கலவரத்தின் கனதி கருதி கிழக்கு மக்களும் ஹக்கீமின் சாணக்கிய முடிவை வரவேற்றிருந்தனர்.ஆனால், இதன் பின்னரான காலப்பகுதியிலேயே ஹக்கீம் என்ற தனிமனிதனின் சுய ரூபம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பிக்கின்றது.

ஹக்கீம் பிச்சையிட்ட ரணிலின் ஆட்சியில் 2003ம் ஆண்டு வாழைச்சேனையில் பாசிசப் புலிகளினால் சுட்டெரிக்கப்பட்ட ஜனாஸாக்களை அடக்கம் செய்யவும் கொடுக்காத போது தலைவர் எந்த சாணக்கியமான முடிவையும் எடுத்திருக்கவில்லை.மூதூர், சம்பூர் முஸ்லிம்கள் புலிகளால் கொத்தி விரட்டப்பட்ட போதும் முடிவுகள் சரணாகதியை நோக்கியே இருந்திருக்கின்றன.

இடையில் பொத்துவிலில் இறத்தல் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதான அரசபடைகளின் தாக்குதலின் போது நிர்ப்பந்தத்தின் நடுவே நியாயவாதியாக ஹக்கீம் நின்றமையால் தனது பாதுகாப்பையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர், அழுத்கமைக் கலவரத்தின் போதும், முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்ட போதும், பொதுபல சேனாக்களால் அட்டூளியங்கள் அரங்கேறிய போதும் சரணாகதியான முடிவுகளே ஹக்கீமினால் எட்டப்பட்டிருக்கின்றன. எந்த ஆட்சி மாற்றத்தையும் பின்னர் அவர் ஏற்படுத்தியிருக்கவும் இல்லை.

மேலும் 2004 ல் தலைவரின் தனிப்பட்ட  விவகாரத்துக்கு பின்னரான அரசியல் முடிவுகள் தொடர்பிலும், அதனையொட்டி நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தலைவரின் சரணாகதிப் போக்கு தொடர்பிலும், தலைவர் ஹக்கீம் ஆதரிக்கச் கோரிய ஒட்டு மொத்த சிங்களத் தலைவர்களும் இன்று நல்லாட்சியில் ஒரே அணியில் அங்கம் வகித்தும் ,முஸ்லிம்கள் குறித்த நல்லாட்சியின் இரு வருட காலத்துக்குள் சுமார் 80 அடக்குமுறை வன்முறையை சந்தித்தனர். பெற்றுக்கொண்ட விமோசங்கள் தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆனால் மாயக்கல்லி மலை என்ன சேதி சொல்லப்போகிறது என்பது தொக்கி நிற்க, ஹக்கீம் தனது 17 வருட முஸ்லிம் தலைமைத்துவ அரசியலில் தான் புதிதாக பதவியேற்ற பொழுதினில் மாத்திரம் சாணக்கிய அரசியலும், பிற்பட்ட காலங்களில் சரணாகதி அரசியலும் செய்திருக்கின்றார் எனும் முடிவுக்கு இலகுவாக வரலாம்.

Related posts

தொகுதி அமைப்பாளர் நியமனம்

wpengine

றியாஜ் பதியுதீன் தொடர்பில் பொய்யான செய்தி! மனைவி முறைப்பாடு

wpengine

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமத்தை உருவாக்கும் ஹிஸ்புல்லாஹ்

wpengine