Breaking
Sun. Nov 24th, 2024

ஹக்கீம் காங்கிரஸ் தலைவருக்கு ஏனைய முஸ்லிம்கட்சிகளின் தலைவர்கள் முண்டு கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் முஸ்லிம் சமூகத்திற்காக ஹக்கீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அளப்பரிய சேவை செய்வதாகவும் சாய்ந்தமருது இக்பால் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.


தனது பேனையை ஹக்கீம் காங்கிரஸுக்குக் குத்தகைக்குக் கொடுத்துள்ள சாய்ந்தமருது இக்பால் கௌரவ அமைச்சர் ஹக்கீமுக்காக அயராது எழுதி வருகின்றார்.

அத்துடன் மட்டும் நில்லாது கௌரவ அமைச்சர் ஹக்கீமை திருப்திப் படுத்துவதற்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் ஏனைய முஸ்லிம்கட்சிகளின் தலைவர்கள் தொடர்பில் இல்லாத பொல்லாத கதைகளையும் அபாண்டமான பொய்களையும் கூறி தூஷித்து வருகிறார்.

மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பொத்துவில் சிலை விவகாரத்தைத் தடுக்க தனது தலைவர் பாடுபட்டதாகவும் அதற்கு சத்தியத் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் கை கொடுக்கவில்லை எனவும் அவர் புராணம் பாடியுள்ளார்.
இவ்வாறு சத்தியத் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட்டை குற்றங்காணும் இக்பால் அவர்களே உங்களக்கு தன்மானம் இருந்தால் நமது சொந்த ஊரான சாய்ந்த மருது ஜும்மா பள்ளி வாசலுக்கு வந்து தொழுகை முடிந்து கலைந்து செல்லும் மக்களிடம் இந்த விடயங்களை முன்வைக்க உங்களால் முடியுமா? அந்தத் துணிவு உங்களுக்கு இருக்கின்றதா?

இக்பால் அவர்களே, எமது சத்திய தேசியத்தலைவர் அமைச்சர் ரிஷாட் வில்பத்து விடயம் தொடர்பில் தன்னந்தனியாக நின்று போராடிய போது ஹக்கீம் காங்கிரஸ் தலைவர் எங்கே ஓடி ஒளிந்தார்?

மன்னார் நீதிமன்ற கல்லெறிப்பு சம்பவம் தொடர்பில் சத்தியத் தேசியத் தலைவரை இனவாதிகள் வேண்டுமென்றே குற்றஞ்சாட்டி அவரை சிறையில் அடைக்க முற்பட்ட போது அப்போது நீதி அமைச்சராக இருந்த சாணக்கியம் நடந்த உண்மைகளை எப்போதாவது மக்கள் முன்னர் தெரிவித்தாரா?

ஹக்கீம் காங்கிரஸ் தலைவர் ஏனைய முஸ்லிம் கட்சித் தலைவர்களை தொடர்ந்து கருவறுத்துக் கொண்டிருக்கும் போது உங்கள் சாணக்கியத் தலைவருக்கு உதவ வில்லையென நீங்கள் கொக்கரித்து வருவது எந்த வகையில் நியாயமானது. இனியாவது உங்கள் குப்பை எழுத்துக்களை விட்டு விடுங்கள்.
ஜுனைதீன் மான்குட்டி
மாவட்ட கொள்கைப் பரப்பு செயலாளர்
உயர்பீட உறுப்பினர்
அமைச்சரின் இணைப்பாளர்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *