கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு நாம் இன்னும் ஏமாறும் சமூகமா?

(அஸாம் ஹாபிழ் – சாய்ந்தமருது)

மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியை எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சுய நிர்ணயம் மற்றும் நலன் கருதி தமிழ் ஈழ  விடுதலைப் புலியினரின் ஆயுதப் பலத்தோடு புத்தி பலத்தால் போராடி தமது சமூகத்திற்கான விடுதலையை பெற்றுக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலே பல தியாகங்களை செய்து உருவாக்கினார்.

தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பின்னால் முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்ட கட்சி தற்போது எங்கு சென்று கொண்டிருக்கின்றது?

ஹக்கீம் காங்கிரஸை கண்மூடித்தனமாக இன்னும் ஆதரிக்கும் கட்சிப் போராளிகளே தற்போது கட்சி செல்லும் பாதை சரியா? என்பதை சற்று சிந்தியுங்கள்!

ஒரு கட்சியையோ சமூகத்தையோ தலைமை தாங்கி நடாத்தக் கூடிய தலைவன் ஒருவன் இஹ்லாசானவனாகவும், நற்பண்புடையவனாகவும், உண்மையாளனாகவும், கட்சியின் போராளிகளை நேரான பாதையில் வழிநடாத்தக் கூடியவனாகவும், கட்சியை நேசிக்கின்ற தாய்மார்கள் போராளிகள் பெண்களை பாதுகாக்கின்றவனாகவும், கட்சியை சிறந்த முறையிலும் முன்மாதிரியாகவும் நடாத்தக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும்.

ஆனால் மாமனிதரின் மறைவுக்குப் பின்னர் குர்ஆன் ஹதீஸின் பிரகாரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் தலைவன் ஹக்கீம் கட்சியை வழிநடாத்துவதற்கு முற்றிலும் தகுதியானவரா என்பதை சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே..!!!,

ஹக்கீம் காங்கிரஸுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் போராளிகள் வாக்களித்து அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிநார்கள்.

இதன் மூலம் பெற்ற அமைச்சுப் பதவியை ஹக்கீம் பெற்றுக் கொண்டு 2 பிரதியமைச்சுப் பதவிகளை அம்பாறை மண்ணுக்கு வழங்கியது மாத்திரமின்றி பல விதமான வாக்குறுதிகளையும் இந்த மக்களுக்கு வழங்கி அங்குள்ள மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஏமாற்று அரசியல் வியாபாரி ஹக்கீமின் ஏமாற்று வித்தைகளும் பொய் வாக்குறுதிகளும் பல உள்ளன.

கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி பல முறை பல கலந்துரையாடல்களை ஏற்படுத்தி கலைந்து மக்களிடத்தில் வாக்குறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ளது இதுவரைக்கும் எந்தவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை
ஆனால் தற்போது சாணக்கியத்தால் சென்ற வாரம் கல்முனை புதிய நகர திட்டம் சம்பந்தமான போலியான கலந்துரையாடல் ஓன்றை நடாத்தி மக்களை ஏமாற்றுவதற்கு நாடகமாடியுள்ளார் இந்த ஹக்கீம்.

அது மாத்திரமின்றி கல்முனையில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றம் பெற்றது. இதனை தடுக்க முடியாத இந்த சாணக்கியத்திற்கு, கல்முனையில் ஹக்கீம் காங்கிரசுக்கு பிரதியமைச்சரும் உண்டு அவரினாலும் தடுக்க முடியாது போய்விட்டது.  இது ஹக்கீமின் போலி நாடகமா?
மக்களிடம் இருந்து தப்புவதற்காக கல்முனையில் இடம் ஓன்றை தாருங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை அமைத்துத்தருகிறேன் என்று கூறினார். அதுவும் காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது சாணக்கியம் புறப்பட்டுச் சென்று விட்ட  பஸ்ஸுக்கு கைகாட்ட நினைக்கின்றார் இது போலி நாடகம் என்பது இந்த ஹக்கீம் காங்கிரஸ் போராளிகளுக்கு இன்னும் புரியவில்லையா???

இல்லை இவர்கள் மடையர்கள் என்று எண்ணி ஹக்கீம் ஏமாற்றுகிராரா????….

சிந்தியுங்கள் சகோதர்களே!!!!!

இது போன்று சம்மாந்துரை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை செய்து தருவதாகபல முறை கலந்துரையாடி வாக்குறுதியளித்து ஒரு வருடம் கடந்து சென்றுவிட்டது … சென்ற வாரம் சம்மாந்துறையிலும் சம்மாந்துறை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி சம்மாந்துறை ஹக்கீம் காங்கிரஸ் போராளிகளையும் மக்களையும் மடையர்களாக்கியுள்ளார். ஒரு வருடம் கடந்தும் இதுவரைக்கும் எதுவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

சம்மாந்துறை மண்ணில் 2000 பேருக்கு தொழில் வாய்பை ஏற்படுத்தக்கூடிய பாரிய கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்கு, வடகிழக்கின் விடிவெள்ளி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியில் அமைச்சரபையிலிருந்து 50 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் இதனை அறிந்த ஹக்கீம் இவ்வாறான அபிவிருத்தி நடந்தால் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்ற முடியாது அவர்கள் நம்மை துரத்தி விடுவார்கள் என்ற எண்ணத்துடன் சம்மாந்துறையின் ஹக்கீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரை தொடர்பு கொண்டு கைத்தொழில்பேட்டை அமைப்பை நிறுத்திவிடு என்று கூற இதனால் நமது மன்னுக்கு கிடைக்கவிருக்கும் அபிவிருத்தியும் 2000 தொழில் வாய்ப்புக்களையும் தட்டிவிட்டு உடனே இதனை நிறுத்தியுள்ளார்.

இத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட பணம் இதுவரைக்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சம்மாந்துறையை சேர்ந்தவருக்கே நமது மண் அபிவிருத்தியடையக் கூடாது என்ற எண்ணம் இதுதான் நன்றிக்கடனா???
சம்மாந்துறை மன் மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹும் அன்வர் இஸ்மாயீலின் பின்பு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர் பார்த்து நின்றது சம்மாந்துறையை அபிவிருத்தி செய்யவே தவிர, அபிவிருத்தியை தடுப்பதற்கா???

கைத்தொழில் பேட்டையை தடுத்தவரைப் பற்றி சிந்தித்தீர்களா???? இப்படியான செயல்பாட்டையா சம்மாந்துறை மக்கள் எதிர் பார்த்தார்கள்????

சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் 30 இலட்சம் ரூபா பணம் அன்பளிப்பு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பித்து சிறிது நாட்கள் செல்ல இதனையும் மன்சூரைக் கொண்டு தடுத்துள்ளார்கள் இந்த ஹக்கீம் காங்கிரஸினர்.
இதனால் சம்மாந்துறை மண் அடைந்த பலன் என்ன??, சம்மாந்துறை மக்களுக்கு  கிடைக்கவிருந்த அபிவிருத்தி தடைப்பட்டது,  2000 இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கப்பெறவிருந்த தொழில் வாய்ப்பு தடைப்பட்டது
இதனால் மன்சூருக்கும், ஹக்கீம் காங்கிரஸினருக்கும் கிடைத்த பலன் என்ன???
இதனால் சம்மாந்துறை மக்களுக்கு கிடைத்த அபிவிருத்தி என்ன??? சிந்தியுங்கள் என்  சகோதரர்களே!

ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு நாம் இன்னும்
ஏமாறும் மடையர் சமூகமா!!???

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டே இருப்பான் என்பது பழமொழி.,,………

ஹக்கீமை நம்பி சிலர் ஹக்கீம் காங்கிரஸ்  போராளிகளாக இருக்கும் வரை ஹக்கீம் உங்களை ஏமாற்றியே மடையர் பட்டம் கேட்க வைப்பார் என்பது நடுமொழி,,,

ஹக்கீமை விரட்ட மக்கள் துணிந்து விட்டார்கள் அது  சாய்ந்தமருதில் ஆரம்பித்து விட்டது கண்டி வரை முடிவு  மக்கள் விழித்து விட்டார்கள் என்பது புதுமொழி……

சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்!

ஹக்கீம் இந்த மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பார் இவரின் ஒழிப்பு மறைப்பு லீலைகள் அனைத்தும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. விடயம் அறிந்த மக்கள் ஹக்கீமை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.. வெகு விரைவில் துரத்தப்படுவார். ஏனைய ஹக்கீம் காங்கிரஸ் போராளிகளே நீங்களும் சிந்தியுங்கள்! விழிப்படையுங்கள்!!.,,,

முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியைப் பாதுகாக்க மக்களின் அபிலாசைகளை வெற்றியடையச் செய்ய ஹக்கீமின் பச்சோந்தித் தனத்தையும், குள்ளநரித்தனத்தையும், அவரது லீலைகளையும் அறிந்து கட்சியை அவரிடத்திலிருந்து பாதுகாக்க வெளிநடப்பு செய்தவர்கள்தான் இந்த ஹசனலி, அன்சில், தாஹிர், பசீர் ஆகியோர்களாகும்…..

அவர்களைப் போல் ஏன் மற்றவர்களால் ஹக்கீமை துரத்திவிட்டு ஹக்கீம் காங்கிரஸை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாமனிதர் உருவாக்கிய ஆலமர வீரூட்சத்தை பாதுகாக்க கைகோர்க்க முடியாது???????

சகோதரர்களே நன்று சிந்தியுங்கள் காலம் கனிகிறது பச்சோந்திகளை விரட்டுங்கள்…

அல்லாஹுஅக்பர்,… அல்லாஹு அக்பர்,…அல்லாஹு அக்பர்…

Related posts

பொத்துவில் பிரதேசத்தில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் தொடர் போராட்டம்

wpengine

சமூக விடிவுக்காக ஒருமித்து பயணிக்கவும் தயார் தோப்பூரில் அமைச்சர் றிஷாட்

wpengine

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

wpengine