பிரதான செய்திகள்

ஹக்கீம் கல்முனை முஸ்லிம்களிடம் கேட்பது படு முட்டாள்த்தனமானதாகும்

கல்முனையின் எல்லையை தீர்மானியுங்கள் என ஹக்கீம் கல்முனை முஸ்லிம்களிடம் கேட்பது படு முட்டாள்த்தனமானதாகும் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.


அவர் நேற்று (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையின் எல்லை என்பது ஸாஹிரா வீதி முதல் தாளவட்டுவான் வரை என்பதை எவ்வளவு சொல்லியும் ஹக்கீமுக்கு புரியவில்லை என்றால் இது செவிடன் காதில் சங்கு ஊதியது போன்றுதான் உள்ளது.

கல்முனையை பிரிக்க வேண்டும் என கல்முனை முஸ்லிம்கள் சொல்லவில்லை. கல்முனையை எக்காரணம் கொண்டும் பிரிக்க கூடாது என்றே சொல்கிறோம். அதே போல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் என்பது இனரீதியிலானது என்பதால் அச்செயலகம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே உலமா கட்சியின் கோரிக்கையாகும்.

இதனை முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான கௌரவ பசில் ராஜபக்ஷவும் அண்மையில் அவருடனான சந்திப்பின் போது ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த வகையில் கல்முனையில்
இனரீதியாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் உப செயலகத்தை ரத்து செய்யும் படி ஹக்கீம் அரசை கோராமல் கல்முனையை பிரிப்பதற்குரிய எல்லையை முஸ்லிம்களிடம் கேட்டுக்கொண்டிருப்பது படு முட்டாள்த்தனமானதாகும்.

கல்முனையில் முஸ்லிம்களும் தமிழரும் ஒற்றுமையாய் வாழ வேண்டுமாயின் கல்முனை பிரிக்கப்பட கூடாது. அவ்வாறின்றி இனரீதியில் பிரிக்கப்பட்டால் பாரிய இன மோதல்களுக்கு வழி வகுக்கும்.
ஆகவே இனரீதியாகவும் நிலத்தொடர்பற்ற ரீதியாகவும் கல்முனையை பிரிப்பதை விடுத்து கல்முனை தாள வெட்டுவான் வீதியிலிருந்து பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து பாண்டிருப்பு செயலகம் என்ற புதிய
செயலகத்தை வழங்க முடியும் என்ற பிரேரணையை உலமா கட்சி முன் வைத்துள்ளது. இந்த வகையில் செயலகம் வழங்க ஹக்கீம் முயற்சிக்கலாம்.

இதற்கு முடியாது போனால் ஹக்கீம் இதில் தலையிடாமல் தனது அமைச்சு பதவியை ருசி பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். மஹிந்த தலைமையிலான அடுத்த அரசில் இன்ஷால்லாஹ் கல்முனையை நாம் காப்பாற்றுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Northern Politicos Not Happy

wpengine

புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த மு.கா.உறுதுணை மாஹிர்

wpengine

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine