பிரதான செய்திகள்

ஹக்கீம்,றிஷாட் பதியுதீன் இணைந்து புதிய கூட்டணி அமைக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளன.

Related posts

புலிகள் நினைவு கூரப்படுவதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை அமைச்சர் மனோ

wpengine

பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் அமீர் அலி, யோகஸ்வரன்

wpengine

முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் (வீடியோ இணைப்பு)

wpengine