கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீமின் பழைய குருடி கதவை திறடி என்ற கதையுடன் ஆதவன் எழுந்து செல்வான்.

(ஜெமீல் அகமட்)
எதிர் வரும் 16 ம் திகதி அட்டாளைச்சேனை மண்னில் நடைபெறும் இப்தார் நிகழ்வுக்கு அந்த மக்களை இது வரை ஏமாற்றி கொண்டு இருக்கும் ஆதவன் ஹக்கீம் வருகை தரவுள்ளார் அதனால் சிலர் பாராளுமன்றம் போகலாம் என்ற சந்தோஷத்தில் தன்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு ஹக்கீமின் கடந்த கால  நாடகங்கள்  பற்றி மக்களும்  சிரிப்பு இறுதியில் பழைய குருடி கதவை திறடி என்ற கதையுடன் ஆதவன் எழுந்து செல்வான்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க கூடாது என்று ஹக்கீம் திட்டமிட்டு சட்டத்தை புகுத்தியுள்ளார் இது சிலருக்கு புரிந்தும் ஹக்கிமை இன்னும் நம்புகின்றனர்.

அதாவது  19  வது அரசியல் திருத்த சட்டத்தின்படி ஒருவருக்கு  தேசியப்பட்டியல் வழங்குவது என்றால் அவரது பெயர் குறிப்பிட்ட கட்சியின் ஊடாக தேசியப்பட்டியல் உறுப்பினர் என்று தேர்தல் ஆனையாளருக்கு அறிவித்து இருக்க வேண்டும் அல்லது தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருக்க வேண்டும் அத்தோடு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினராகவும் இருக்க வேண்டும் இப்படியான சட்டத்தின்படி  தான் சரத்பொண்சேகா சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப தனது கட்சியின் உறுப்பினர்  பதவியிலிருந்து விலகி தற்போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருக்கின்றார் அப்படி  இருந்தும் அவர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக தேர்தலில் போட்டியிடவில்லை என்ற விவாதம் காரணத்தால்   அவருக்கு வழங்கிய தேசியப்பட்டியல் விடயமான சர்ச்சை விசாரனையில் உள்ள போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க கூடிய நிலமையில்லை அங்கு தேர்தல் கேட்டு தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இல்லை அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் பெயரிடபட்ட எவரும் அங்கு  இல்லை ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியலில் பெயரிடபட்ட வர்களே உள்ளனர் அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தேசியாப்பட்டியலை வழங்க முடியாது இப்படியான சட்ட சிக்கலால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க முடியாது என்று  ஒரு சட்டமுதுமாமனியான ஹக்கீமுக்கு சட்டம் தெரியாதா? தெரியும் ஆனால் அவர் கடந்த கால மஹிந்த ஆட்சியின் சட்டத்தை போல் நினைத்து இருக்கலாம் அந்த ஆட்சியில் கூட அன்வர் இஸ்மாயிலின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி பஷீல் ராஜபக்சவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்றும் தீர்ப்பு வழங்காமல் வழக்கு  காலவதியான சரித்திரம் உள்ளது .

ஹக்கீம்  இம்முறை அல்ல அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக வந்த காலம் தொட்டு இன்று வரை பல தடவை தேசியப்பட்டியல் என்று கூறி அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி வாங்குகளை கொள்ளையிட்டு வருகின்றார் பின்பு ஆட்சிக்கு வரும் கட்சிக்கு விற்பனை செய்கின்றார் என்பது நாட்டு மக்களுக்கு புரியும் ஆனால் அட்டாளைச்சேனை மக்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆனால் உண்மையில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கபட வேண்டும் அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்கு அளிக்கும் பிரதேசம் அத்தோடு ஹக்கீமை இன்றும்  நம்பி இருக்கும்  மக்கள் அங்கு தான் உள்ளனர் அத்தோடு சிறு பிள்ளைகள் கண் கட்டி விளையாடுவது போல் ஹக்கீமின் ஏமாற்று விளையாட்டுக்கு அவர் கண்டெடுத்த பிரதேசம் இப்படி பல வரப்பிரசாரங்களை அட்டாளைச்சேனை மண் ஹக்கிமுக்கு வழங்கி கொண்டு இருக்கும் போது ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களை பகடை காயாக நினைத்து தொடர்ந்து ஏமாற்றாமல் சட்டத்தில் திருத்தம் செய்தாவது தேசியப்பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹக்கீம் நினைத்து இருந்தால் தேர்தல் முடிவு கிடைத்த மறுநாள் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுத்து இருப்பார் அவர் சட்டத்தின் பிடியில் அட்டாளைச்சேனையை மக்களை மாட்டியுள்ளார் .
 ஆனால் இறுதி அரசியல் செய்யும் குறுகிய காலத்தில் தனது சகாபாக்கள் சுகபோகம் அனுபவிக்க வேண்டும் என்று இறுதி ஆசையில் ஹக்கிம் தனக்கு அரசியலில்  நரித்தந்திரம் கற்பித்து தரும் சல்மானை இராஜினாமா செய்யாமல் தொடர்ந்து  வைத்து இருக்கவே விரும்புகிறார் அதனால்தான் இப்போது அபிவிருத்தி மைதானம் லைட் என்று கூறி அட்டாளைச்சேனை மக்களின் சிந்தனையை  வேறு பக்கம் திசை திருப்பி வருகின்றார் .

 வேறு இந்த ஜென்மத்திலும் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கமாட்டார் ஆனால்  வந்து போவதற்கு  பொய்வாக்குறுதிகளை  சிரித்த முகத்தோடு அழகாக  வழங்குவார்.

எனவே இழவு காத்த கிளியின் கதைக்கு அட்டாளைச்சேனை மக்கள் முடிவுகட்ட வேண்டு என்றால் அரசியல் பாதையில் மாற்றம் ஏற்படுத்த முன் வர வேண்டும் அத்தோடு 16 ம்திகதி அட்டாளைச்சேனை வரும் ஹக்கீமிடம் கேளுங்கள்.

1) பிரதி அமைச்சராக இருந்து கட்சியை தோல்வியடைய செய்த M S தௌபீக் அவர்களுக்கு எப்படி தேசியப்பட்டியல் கொடுப்பது அவர் உன் உறவு என்பதற்காகவா கொடுத்தது.

2) முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நாட்டில் அதிக வாக்கு அளிக்கும் அட்டாளைச்சேனை மண்னுக்கு ஏன் தேசியப்படியல் வழங்க தயங்குகிறாய்.

3) அம்பாறை மாவட்டத்தை ஏமாற்றுவது ஏன் ,

4) ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் என்றால் எதிர்ப்பு தெரிவித்து  வீரம் பேசுபவர்கள் சல்மானை இராஜினாமா செய்ய சொல்லுங்கள்
5) கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் நசீர் கட்சிக்கு செய்த பணியை விட சல்மான் செய்துள்ளாரா என்று கேளுங்கள் சல்மான் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் என்ன ?

இது போன்ற ஆனித்தரமான கேழ்விகளை ஹக்கீமிடம் கேளுங்கள் ஆதவன் கூட்டம் திசை தெரியாமல் ஓடி விடும்

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த தேர்தலில் களமிறங்கியதால் இன்று அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்துள்ளது அதனால் எதிர்வரும் தேர்தலில் அம்பாறையில் அதிக வாக்குகள் பெறுவது மயில் சின்னம் என்பதில் சந்தேகமில்லை  அந்த சூழ் நிலை இப்போதே தெரிகிறது அதனால் தனது சகபாக்கள் சுகபோகம் அனுபவிக்கும் இறுதி காலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்   தனது இறுதி அரசியல் காலம் இனிமேல் அம்பாறையில் செல்வாக்கு இல்லை வர முடியாது என்பதால் இருக்கும் காலத்தை மக்களை ஏமாற்றி சுகபோகம் அனுபவிக்க வேண்டும் என  ஹக்கீம் திட்டமிட்டு தேசியப்பட்டியலை தனது விருப்பம் போல் கொடுக்கின்றார் அவருக்கு அட்டாளைச்சேனைக்கு  கொடுக்கும் நோக்கமில்லை அப்படி ஒரு நோக்கம் இருந்தால் எப்போதே  தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு கிடைத்து இருக்கும் இதை சிலர் சிந்திக்க மறந்து வாழ்கின்றனர் இவர்கள் யார் என்று பார்த்தால் ஹக்கீமை வைத்து குடும்பம் நடத்துகின்றவர்களாகவே இருக்கின்றனர் அத்தோடு அட்டாளைச்சேனை அரசியல் வாழ்க்கை முன்னேறாக் கூடாது என்று நினைப்பவர்களும் இவர்களே தான் அதனால்தான்  இழவு காத்த கிளியின் கதை போல்  அட்டாளைச்சேனை மக்களின் அரசியல்  வாழ்க்கை உள்ளது.

Related posts

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

wpengine

இதுவரை ஐந்து லச்சத்து 37ஆயிரம் ரோஹிங்கியர் வெளியேற்றம்.

wpengine

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் 9 வீதிகள் செப்பனிடல்

wpengine