கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஹக்கீமின் நரித்தனமும், நீதி மன்றத்தில் பார்வையாளராய்

நாட்டின் அரசியல் நெருக்கடியில் முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே கருத்திற் கொண்டு பயணித்த தனிப் பெரும் ஆளுமையே அ.இ.ம.கா தலைமையாகும்.

இரு பெரும்பான்மைக் கட்சிகளாலும் சொல்லிக் கொள்ளும் அளவில் திருப்தியில்லாத வாழ்க்கையையே சிறுபான்மையான நாம் அனுபவித்து வருகிறோம்.

சிறுபான்மைக் கட்சிகள் தங்களின் தனித்துவ அடையாளங்களை மறந்து போராட்டங்களில் குதித்தது புத்திஜீவிகளால் விமர்சனத்திற்குள்ளானது.

ஐதேக ஊடாக ஏற்பாடு செய்த போராட்டங்களில் ஐ.தே.கட்சியின் உறுப்புரிமை பெற்ற போராளிகள் போல பச்சை சட்டைகளையும், பச்சைத் தொப்பிகளையும் அணிந்து கொண்டு போராட்டத்தில் கர்சித்த நடிபங்கு எம் இனத்திற்கான அவமானமே..

ஜனநாயக வெற்றிக்கான போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் நடுநிலைத் தன்மை ஓரளவுக்கு அ.இ.ம.கா தலைவர் பேணினார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதியின் செயற்பாட்டையும், பிழையான முடிவையும், அடுக்கடுக்கான முன்னுக்குப் பின் முரணான வார்த்தை ஜாலங்களையும், பொய் மூட்டைகளையும் அ.இ.ம.கா தலைமை கண்டித்தாரே ஒளிய மஹிந்த தரப்பை பிழை என்றோ ரனில் தரப்பு மிகத்தூய்மை என்றோ எங்கும் கூறவில்லை.

இலங்கைத் திருநாட்டைப் பொறுத்த மட்டில் ஆட்சிக்கு வரும் தலைமைகளோடு நாட்டு நலனிலும், சிறுபான்மை இனருக்கான பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் சேர்ந்து பயணிப்பது என்பது ஒவ்வொரு காலத்திலும் தேவையான அம்சமாகும்.
ஒருவரை தலைக்கு மேல் தூக்கியும் மற்றுமொருவரை படுமோசமாக விமர்சிப்பதும் மனசாட்சிக்கு விரோதமான செயலாகும்.

கூட்டு முயற்சியால் மேற் கொண்ட ஜனநாயக வெற்றியை வெறுமனே சுயநலத்தில் ஏகபோக உரிமை கொண்டாடுவது வரலாற்றுத் தவறைச் செய்த ஹக்கீம் தரப்புக்கு அழகில்லை.

மக்காவில் செய்து கொண்ட புரிந்துணர்வு செயற்பாட்டை தன்னுடைய பிரயத்தனத்தால் மேற்கொள்ளப்பட்டதாக காட்டும் ஹக்கீமின் நரித்தனமும், நீதி மன்றத்தில் பார்வையாளராய் சென்று தாம் தான் நீதியைப் பெற்றுக் கொடுத்ததாக காட்ட விளையும் சிறுபிள்ளைத்தனமும் மக்களின் மிகப் பெரும் விமர்சனத்தை சம்பாதித்துள்ளது.

சருகாகிக் கொண்டிருந்த மரத்தை கொஞ்சம் காப்பாற்றிக் கொள்ள ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டின் ஊடாக விளைவது நன்றாகவே புலப்படுகிறது.

றிஷாட் பதியுதீனின் அமைதியான போக்கும், அடிக்கடியான ராஜதந்திர சந்திப்புக்களும், எப்போதும் போல சகஜமாகப் பழகும் சுபாவமும் இவ் வெற்றியின் பாரிய பங்களிப்பாகும். இதற்கு ஜனாதிபதியின் வாய்மூலமான பதில் முக்கியம் பெறுகிறது. “றிஷாட்டை நம்பி பசில் மோசம் போனார்” என்ற வாரான ஜனாதிபதியின் கருத்திலிருந்து உண்மயான ஜனநாயக ராஜதந்திரியாக றிஷாட் செயற்பட்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமானது.

உண்மையில் றிஷாட் தரப்பினர் மஹிந்த அணியோடு சேர்ந்திருந்தால் ஹக்கீம் அணி பின்தொடர்வதை தவிர வேறு வழி இல்லை.

ஹக்கீம் தரப்பு மஹிந்த அணியோடு சென்றிருந்தால் றிஷாட் அணி எதிர் தரப்பையே தேர்ந்தெடுத்திருக்கும் சூழ்நிலையே அதிகமாக இருந்தது என்ற உண்மையை அரசியல் அறிவுள்ள சாதாரணமானவருக்கும் புரியும்.

ஆகவே மேற்படி செயற்பாட்டில் றிஷாட் எனும் ஆளுமையே சாமர்த்தியமாக சாதித்தது என்று சொல்வதில் அரசியல் அவதானியாக இருக்கும் ஒவ்வொருவரும் மகிழ்சியடைகின்றனர்.

-ஹயாஹைன்-

Related posts

புல்மோட்டை இப்தார்! மாகாண சபை உறுப்பினர் அன்வரின் அறிக்கை சோடிக்கப்பட்டதா?

wpengine

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine

நீதி கேட்ட மறிச்சுக்கட்டி மக்களிடம் அமைச்சர் ஹக்கீம் ஆதரவாளர்கள் காட்டம் (வீடியோ)

wpengine