Breaking
Mon. Nov 25th, 2024

(விடிவெள்ளி)

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் மோகம் கொள்­ளக்­கூ­டாது என்றும் தெரி­விப்­பது       தவ­றாகும்.

அவ்­வா­றெனில் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  பத­வியில் மோகம்           கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் தன்னைப் பற்றி கூட்­டங்­களில் தெரி­விக்கும்             கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகை­யிலே அவர் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில் கட்­சியின் யாப்பில் செய­லாளர் அர­சி­யலில்             ஈடு­ப­டக்­கூ­டாது என்று குறிப்­பி­டவில்லை. செய­லாளர் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது, அமைச்சுப்           பத­விக்கோ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்கோ ஆசைப்­ப­டக்­கூ­டாது என்று தெரி­விக்க முடி­யாது. அப்­படிக் கூறு­வ­தென்றால் அது கட்­சியின் தலை­வ­ருக்கும், பொரு­ளா­ள­ருக்கும் உட்­பட்­ட­தாக இருக்க வேண்டும்.

தேசியப் பட்­டியல் மூலம் எனக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கு­வ­தா­கவும், பொதுத்      தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டா­மெ­னவும் கட்­சியின் தலை­வ­ரினால் எனக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டது. உறுதி மொழியும் வழங்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசிய கட்­சியின் தேசியப் பட்­டி­யலில் எனது பெயர் 6 ஆவ­தாக இடம்­பெற்­றி­ருந்­தது என்­றாலும் எனக்கு தேசி­யப்­பட்­டியல் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வில்லை.

தேர்­தலில் போட்­டி­யிட திட்­ட­மிட்­டி­ருந்த என்னைத் தடுத்து நிறுத்தி தேசி­யப்­பட்­டி­யலில்                 உள்­வாங்­கப்­ப­டு­வ­தாக கூறி­யமை திட்­ட­மிட்ட சதி­யா­கவே நான் கரு­து­கிறேன். இப்­போது நான் கட்சியின் தலைவருக்கு எதிராக சதி செய்ததாக கூறப்படுவதெல்லாம் சோடிக்கப்படும் கதைகளாகும்.

கட்சியின் எதிர்கால நகர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *