(ஜெமீல் அகமட்)
சட்டம் படித்த சட்ட முதுமாமனி ஜனநாயகத்தை மூடக்க மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி ஹக்கிம் எதிர்ப்பு கூட்டம் (மக்கள் எழுச்சி மகாநாடு ) நேற்று (03/03/2014) வெள்ளிக்கிழமை மாலை நிந்தவூர் பிரதான வீதியில் நிந்தாவூர் அபிவிருத்திக்கு சொந்தாக்காரனான முன்னால் தவிசாளர் தாகீர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் கதாநாயகனாக முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் பாதுகாவலன் என மக்கள் பேசும் முன்னால் செயலாளர் ஹசன் அலி மற்றும் அட்டாளைச்சேனை முன்னால் தவிசாளர் சட்டத்தரனி அன்சீல் முன்னால் பொத்துவில் பிரதேச உப தவிசாளர் மற்றும் உயர்பிட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
நடைபெற்றகூட்டத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேசங்களில் இருந்தும் பெரும் திறளான மக்கள் வந்து இருந்தனர் ஆனால் அங்கு வந்த மக்களை பார்க்கும்போது ஒரு மகாநாட்டுக்கு வந்த மக்கள் வெள்ளம் போல் இருந்தது இப்படியான மக்கள் வெள்ளம் இது வரை நிந்தவூரில் எந்த கூட்டத்துக்கும் மக்கள் வரவில்லை என்று தான் கூற வேண்டும்
ஹக்கிம் அவர்கள் செய்யும் அரசியல் வியாபார தந்திரம் சமுதாயத்தை ஏமாற்றும் நரி தந்திர வழிகள் ஹக்கிம் கிழக்கு மண்னுக்கு செய்யும் துரோகம் என்பவற்றை அறிய வந்த மக்களுக்கு கூட்டத்தில் பேசியவர்கள் விரிவாக ஹக்கிம் அவர்களின் சர்வதிகார போக்கை கூறினார்கள்
இறுதியாக ஹசன் அலி தலைவர் திருந்த வேண்டும் என்று பேசிய போது
ஹக்கிமை தலைமையிலிருந்து விரட்ட வேண்டும்
ஹக்கிமை தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது
ஹக்கிமை திருத்த அவர் என்ன #மனைவியா? அல்லது #கணவானா?
ஹக்கிம் தலைவர் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டாம்
#அஸ்ரப்பின் கொள்கை என்றால் #றிசாத் அவர்களுடன் இனைந்து கொள்ளுங்கள்
ஹக்கிம் தலைவர் என்று பேச வேண்டாம்
ஹக்கிமை இந்த பகுதிக்குள் வர அனுமதிக்க முடியாது
சமுதாயத்தை ஏமாற்றும் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டாம் றிசாட்டோடு இனைந்து கொள்வோம்
ஹக்கிமை விட றிசாத் எவ்வாளவோ நல்லம்
என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோஷம் எழுப்பி ஹக்கிமுக்கு எதிராக கூக் குரல்யிட்டனர் அதனால் ஹசன் அலி அவர்கள் சிறிது நேரம் அமைதிகாத்து மக்கள் கருத்தை கேட்டு கொண்ட பின் உயர்பிடத்தில் உள்ளவர்கள் ஹக்கிமின் ஆதரவாளர்கள் அதனால் தலைவரை உயர்பிடம் மாற்ற முடியாது நாங்கள் முயற்சி செய்தாலும் வெற்றி பெற முடியாது காடையர்களை வைத்து எங்களை ஹக்கிம் மிரட்டுகிறார் எனவே தலைவரை மாற்ற இனி மக்கள் ஆதரவு வேண்டும் என்று கூறிய போது ஹக்கிமை தலைமையிலிருந்து விரட்ட நாங்கள் பூரண ஆதரவு தருவோம் ஹக்கிமுக்காக பேசுபவரை விரட்டுவோம் என்று மக்கள் மிகவும் ஆவேசமான கோஷத்துடன் உறுதியுடன் கூறினார்கள் இவைகளை பார்க்கும் இனி அம்பாறை மாவட்டத்தில் ஹக்கிம் ஆதரவு கூட்டம் இனி நடக்குமா? என்பது சந்தேகமாகவுள்ளது
அத்தோடு இந்த கூட்டத்தின் நேரம் மிகவும் குறுகிய காலமாக இருந்ததால் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த பல முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை அவர்கள் நடைபெற உள்ள 16 ஹக்கிம் எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றன
ஏதோ ஹசன் அலியின் மக்கள் எழுச்சி கூட்டம் என்பது ஹக்கிமுக்கு விழ்ச்சி என்று தான் கூற வேண்டும் இதனால் எதிர்வரும் காலங்களில் ஹக்கிம் அவர்களின் எதிர்கால அரசியலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அதற்கு அம்பாறை மக்கள் மூழு முச்சுடன் செயல்படுவார்கள் என்பதை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் சான்றுதலாக இருக்கிறது
எவர் எப்படி பேசினாலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பாதுகாக்கும் அம்பாறை மக்கள் ஹக்கிமை தலைமை பதவியிலிருந்து விரட்டுவது உறுதியாகி விட்டது அதில் எந்தவித சந்தேகவுமில்லை என்பதை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் கூறுகிறது
அம்பாறை மாவட்ட மக்களால் சொகுசா வாழும் ஹக்கிம் குரூப் இனியும் அந்த மக்களை பச்சை மடையர்களாக நினைக்க கூடாது அந்த மக்கள் இப்போது விழித்து கொண்டு இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது
அம்பாறை மக்களை மடையர்களாக நினைத்து இருக்கும் ஹக்கிமுக்கு காலம் பதில் சொல்லும் அப்போது கண்னீருடன் தலைமையை விட்டு வெளியேற்ற ஹசன் அலியின் போராட்டம் வெற்றி பெறும் அதற்கு அம்பாறை மக்கள் துனிந்து விட்டனர் என்று தான் கூற வேண்டும் அல்லாஹ் உதவி செய்யட்டும்