பிரதான செய்திகள்

ஹக்­கீம், ஹசன் அலி, பஷீ­ருக்கு ஹனீபா மத­னி பகி­ரங்க மடல்

அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி தொடர்­பாக உங்­க­ளுக்­கி­டையே உரு­வாகி யுள்ள கருத்து முரண்­பா­டுகள் நாளுக்கு நாள் வளர்ச்­சி­ய­டைந்து விஸ்­வ­ரூ­ப­மாகி முற்றி முறு­கிப் ­போ­யி­ருக்கும் இன்­றைய நிலையில் இப் ­ப­கி­ரங்கக் கடி­தத்தை மிகக் கவ­லை­யுடன் வரை­கின்றேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், தவி­சாளர் மற்றும் பொதுச் செய­லாளர் ஆகி­யோ­ருக்கு அக் கட்­சியின் உறுப்­பினர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி எழு­தி­யுள்ள கடி­தத்­தில்­தெ­ரி­வித்­துள்ளார்.

மேலும் அக்­க­டித்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, உங்­க­ளுக்­கி­டை­யி­லான இந்தக் கருத்­து­வே­று­பா­டுகள் துளிர்­விட ஆரம்­பித்த வேளை­யி­லேயே இவ்­வா­றான கருத்து முரண்­பா­டு­களை நீங்கள் மூவ­ரு­மாக மனந்­தி­றந்து பேசி முடி­யு­மான விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்து உங்­க­ளுக்குள் தீர்த்துக் கொள்­ளு­மாறு நான் எனது ஆலோ­ச­னையை ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வை­களில் தெரி­வித்­தி­ருந்தேன்.

எனினும், எனது வேண்­டுகோள் தொடர்பில் நீங்கள் மூவ­ருமே உரிய கவ­னத்தைச் செலுத்தி முஸ்லிம் சமூ­கத்­தி­னதும், நமது கட்­சி­யி­னதும் நலன்­களைப் பேணிச் செய­லாற்ற முன்­வ­ரா­ததால் இன்று கட்­டு­மீ­றிய நிலைக்கு இந்த விவ­காரம் சென்­றி­ருப்­பதை கட்­சியின் பற்­றாளன் என்ற வகையில் நான் மிக மனக்­கி­லே­சத்­துடன் நோக்­கி­ய­வ­னாக இத்­தி­றந்த மடலை வரை­ய­வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்ளேன்.

உங்கள் எல்­லோ­ரையும் விட, உங்­களின் ஆத­ர­வா­ளர்­க­ளாகக் காட்டிக் கொள்வோர் உங்­க­ளுக்­கி­டையில் எழுந்­தி­ருக்­கின்ற இக்­க­ருத்து வேறு­பா­டு­களை மைய­மாக வைத்து பரஸ்­பரம் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்ற மாற்றுக் கருத்­துக்­களும், பதில் குற்­றச்­சாட்­டுக்­க­ளு­மா­னது, கட்சிப் போரா­ளிகள் மற்றும் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளி­டையே பெரும் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்­பதை நான் இவ்­வி­டத்தில் மறைக்­காமல் சுட்­டிக்­காட்­டி­யாக வேண்டும்.

மாத்­தி­ர­மல்­லாது, எதிர் அர­சியல் முகாம்­களைச் சேர்ந்­தோ­ரி­டமும் இந்­நாட்டில் வாழு­கின்ற சகோ­தர சமூ­கத்­தி­ன­ரி­டமும், சர்­வ­தேசத் தலை­வர்கள் மற்றும் ராஜ­தந்­தி­ரி­க­ளி­டமும் இக்­கட்­சியின் மீது இது­கால வரைக்கும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டி­ருந்த அபா­ர­மான நம்­பிக்­கை­யையும், நன்­ம­திப்­பையும் வெகு­வாகச் சிதை­வ­டையச் செய்யும் வகையில் விரி­வ­டைந்­தி­ருப்­பது நம்மைப் பெரும் கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இக்­கட்­சியைத் தோற்­று­வித்த ஸ்தாபகப் பெருந்­த­லை­வ­ரான மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்­களின் நல்­லெண்­ணங்­க­ளுக்கும், உயர் இலட்­சி­யங்­க­ளுக்கும் முற்­றிலும் முர­ணான வகையில் இன்று நமது கட்சி தடம்­பு­ரண்டு, திசை மாறிப் பய­ணிப்­பதை அடி­மட்டப் போரா­ளிகள் முதற்­கொண்டு உயர்­பீட உறுப்­பி­னர்கள் வரை­யான அனை­வ­ராலும் மிகக் கவ­லை­யுடன் நோக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நமது ஸ்தாபகப் பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நம்­மை­யெல்லாம் விட்டுப் பிரிந்த பின் இற்றை வரைக்கும் இந்த சமூக அர­சியல் இயக்­கத்தை தமது தோளிலும், சிர­சி­லு­மாகச் சுமந்து கொண்டு இந்த முஸ்லிம் சமூ­கத்தை வழி­ந­டாத்தி வந்­துள்ள நீங்கள், இடையில் எழுந்த எத்­த­னையோ சிக்கல் நிறைந்த பிரச்­சி­னை­களை எல்லாம் ஒன்­று­பட்டு, ஓர­ணியில் நின்று வெற்­றி­கொண்டு வந்­துள்ள வர­லா­று­க­ளுக்கு மத்­தியில், இப்­போது உங்­க­ளுக்­கி­டையில் எழுந்­தி­ருக்­கின்ற இக்­க­ருத்து முரண்­பாட்­டினை மட்டும் உங்­க­ளுக்­குள்­ளாக நீங்கள் உள்­ளகத் தளத்தில் நின்று பேசித் தீர்த்து ஒரு முடி­வுக்குக் கொண்டு வராமல் பகி­ரங்கப் பொது­ வெ­ளியில் பலரும் விமர்­சிக்கும் அள­வுக்கு இவ்­வி­ட­யத்தை வேலி தாண்ட விட்­டி­ருப்­பது ஆழ்ந்த கவ­லையைத் தரு­வ­தாக அமைந்­துள்­ளது என்­ப­தையும் மீண்டும் ஒரு முறை உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

அண்­மைக் ­கா­ல­மாக உங்­களின் ஆத­ர­வா­ளர்கள் எனக் கூறிக் கொள்வோர் மாறி மாறி ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யிட்டு வரும் கருத்­துக்­களும், அறிக்­கை­களும் மிகவும் கீழ்­மட்ட நிலை­யு­டைய வசை­பா­டல்­க­ளாக இன்று பல­ராலும் கரு­தப்­படும் அள­வுக்கு தரந்­தாழ்ந்து காணப்­ப­டு­கின்­றதே அன்றி, அவற்றில் உங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களைத் தடுத்து, இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்தி இக்­கட்­சியைப் பாது­காக்­கின்ற, நல்­லாட்சி வழியில் தூய்­மைப்­ப­டுத்­து­கின்ற, சீரான நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்குள் மீள­மைக்­கின்ற எந்­த­வொரு உருப்­ப­டி­யான விட­யங்­க­ளையும் காண முடி­யா­துள்­ளது.

கட்­சியின் மூத்த தலை­வர்­க­ளான உங்கள் தரப்பு ஆத­ர­வா­ளர்­க­ளாகக் காட்டிக் கொள்வோர் இன்று வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்து வரும் மட்­ட­­ரக­மான குற்­றச்­சாட்­டுக்­களால் கட்­சியின் ஆணி வேராக விளங்­கு­கின்ற போரா­ளிகள் ஆட்­டங்­கண்­டுள்­ளனர். தொடர்ந்து என்ன செய்­வ­தென்று அறி­யாது அவ­திப்­ப­டு­கின்­றனர்.

கடந்த காலங்­களில் இக்­கட்­சியைப் பாது­காப்­ப­திலும், பலப்­ப­டுத்­து­வ­திலும் கிராமக் களங்­களில் நின்று செயற்­பட்டு எதிர் அர­சி­ய­லா­ளர்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கும், அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கும், அளவு கடந்த வன்­மு­றை­க­ளுக்கும் துணி­க­ர­மாக முகங்­கொ­டுத்து தம­து­யி­ரையும் துச்­ச­மாக மதித்து பதி­ல­டிகள் வழங்கி கட்­சியைப் பாது­காத்து வந்த போரா­ளிகள், இன்று தலை­வர்­களே தமக்குள் குடு­மிச்­சண்டை பிடித்துக் கொண்டும், அசிங்­க­மான குற்­றச்­சாட்­டுக்­களை மாறி மாறி வாரி இறைத்துக் கொண்டும் இருப்­பதன் கார­ண­மாக தாம் கால் பதித்து நின்ற உள்ளூர் சமூகக் களத்தை விட்டும் அவ­மானம் தாங்க முடி­யாமல் செய்­வ­த­றி­யாது தடு­மாறிக் கொண்­டி­ருப்­ப­தையும் இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

குர்ஆன் ஹதீஸின் அடிப்­ப­டை­யி­லான யாப்பைக் கொண்­டுள்ள நமது கட்­சியின் முதன்மைப் பிர­தா­னி­க­ளான நீங்கள் மூவ­ருமே, இஸ்­லா­மிய வர­லாற்றில் முரண்­பா­டு­க­ளுக்கும், போராட்­டங்­க­ளுக்கும் தீர்­வான ஒரு அழ­கிய முன்­னு­தா­ர­ண­மாக இன்று வரை முஸ்லிம் அல்­லாத அர­சியல் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாலும் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரும் ‘ஹுதை­பிய்யா’ உடன்­ப­டிக்­கையின் உள்­ளார்த்­தத்தை முழு­வ­து­வ­மாகப் புரிந்து கொள்­ளாமல் இவ்­வாறு முரண்­பட்டுக் கொண்டு பிரிந்து நிற்­பதும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

தாம் பிறந்து வளர்ந்த தாயக மண்­ணான புனித மக்­காவில் அமைந்­தி­ருக்கும் இறை இல்­ல­மான ‘கஃபத்­துல்­லாவை’ வழி­ப­டு­வ­தா­னது தமது பிறப்­பு­ரி­மை­யாகும்.

அதனை விட்டுக் கொடுக்க முடி­யாது என நாயகத் தோழர்கள் உறை­வாள்­களை உரு­வி­ய­வாறு உணர்ச்சி பொங்க எழுந்து நின்ற வேளை­யிலும், அண்ணல் நபி­ய­வர்கள் குறைஷிக் காபிர்­களின் நியா­ய­மற்ற கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்டு இந்த உல­கப்­புகழ் வாய்ந்த தியாக ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்டும், கஃப­துல்­லாஹ்வைத் தவாபு செய்­யாமல் மீண்டும் மதீ­னா­வுக்குத் திரும்பிச் சென்­ற­துமே ஒப்­பற்ற தலை­மைத்­து­வத்­திற்கும், பின்னாட்­களில் கிடைத்த வெற்­றிக்கும் உலக முடிவு வரைக்­கு­மான முன்­னு­தா­ரணச்  செயற்பாடாகும்.

எனவே, கட்சியைப் பாதுகாப்பதிலும், கட்சியைத் தூய்மைப்படுத்துவதிலும், கட்சியை சிறந்த நிர்வாகச் செயற்பாட்டில் வழிநடாத்து வதிலும் இதுவரை காலமும் பல்வேறு தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்து அக்கறை செலுத்திய நீங்கள், உடனடியாகவே உங்களது சமகாலச் செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொண்டு, மனந்திறந்த கலந்துரையாடல் மூலம் உங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து முடிவுக்குக் கொண்டு வருவதுடன், மீண்டும் இக்கட்சியையும், கட்சிக்காக அன்று முதல் இன்று வரை பாடுபட்டு உழைத்து வரும் மக்களையும் கௌரவமான வழியில் வழிநடாத்திச் செல்வதற்கு முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வினயமாக வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என மேலும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

wpengine

வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

wpengine

இறக்காமம் முகைதீன் கிராமத்திற்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் வைபவம்

wpengine