வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலையில் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்தவரை பொலிசார் வலை வீசி தேடி வருகின்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர்.
இவர் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை மிரட்டல் குறித்து அந்த அமைப்பை சேர்ந்த நிக்கிலேஷ் ஷெனாய் என்பவர் காகலிப்புரா பொலிஸில் புகார் அளித்தார்.
அப்போது பேசிய அவர் பேஸ்புக்கில் வலம் வந்த இந்த கொலை மிரட்டல் குறித்து தங்களுக்கு நெருங்கியவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
சாதரணமாக விடமுடியாது இந்த கொலை மிரட்டல் எங்களின் கவனத்துக்கு வந்த உடனேயே நாங்கள் போலீஸில் புகார் அளித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த விஷயத்தை சாதரணமாக விட்டுவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
மைசூரில் வந்த மிரட்டல் மைசூரில் வந்த மிரட்டல் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் கொலை மிரட்டல் விடுத்தவரை தேடி வருகின்றனர்.
கொலை மிரட்டல் போஸ்ட் மைசூரில் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
முதுநிலை பட்டதாரி?
மேலும் இந்த போஸ்ட் போட்டவர் ஹரோஹள்ளி ரவிந்திரா என்பதும் தெரியவந்துள்ளது.
முதுநிலை பட்டதாரியான ரவீந்திரா கனக்கப்புராவை சாலையில் உள்ள ஹரோஹள்ளியை சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல மிரட்டல்கள் ஏற்கனவே பல மிரட்டல்கள் இருப்பினும் முழு உண்மையும் தெரிந்த பின்னர் கொலை மிரட்டல் விடுத்தவரின் முழுதகவல் வெளியிடப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு ஏற்கனவே பல கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.