(அஷ்ரப். ஏ.சமத்)
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு ஸ்ரீ.ல.சு.கட்சித் தலைமையகத்தில் அதன் தலைவா் சிரேஷ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பிணா் எம். மஸ்தான், வடக்கு ஆளுனர் ரேஜிரேல்ட் குரே முன்னாள் அமைச்சா் அதாவுட செனவிரத்தின, நஜீப். ஏ மஜீத் மற்றும் மாகாண சபை உறுப்பிணா்கள் முன்னாள் ஸ்ரீ.ல.சு.கட்சி யின் முஸ்லில் உள்ளுராட்சி உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய வடக்கு ஆளுனர் ரேஜினோல் குரே
இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் பண்டாரநாயக்க காலத் தொட்டு ஸ்ரீ.ல.சு கட்சியை ஆதரித்துவந்தவா்கள். கடந்த 30 வருட கால யுத்த்தின்போதே நாம் தமிழ் கட்சி, முஸ்லீம் கட்சி பௌத்த கட்சி என பிரிந்து நிற்கின்றோம். அது மட்டுமல்ல நமது பாடசாலைகளைக் கூட முஸ்லீம் பாடசாலை தமிழ் பாடசாலை பௌத்த பாடசாலை என பிரித்து வைத்துள்ளோம். அதற்காகவே நான் வவுனியாவில் மூவினங்களும் கல்வி கற்கக் கூடியதொரு பாடசாலையை அமைத்துள்ளோம்.
நாம் சகலரும் ஒரே கூறையின் கீழ் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் ஒன்றினைந்து இந்த கட்சியின் ஆட்சியில் சகலரும் சோ்ந்து கட்டியெழுப்ப வருமாறு வேண்டிக் கொண்டாா். இந்த நாட்டுக்கு முஸ்லீம்கள் வரும்போது ஒரு போதும் பெண்களை அழைத்து வரவில்லை இங்குள்ள சிஙகள பெண்களையே மணமுடித்தாா்கள். அதே போன்று தான் சிங்களவா்களும் இந்தியாவில் இருந்து தான் இங்கு வந்தாா்கள் ஆகவே சிங்கலே என்னும் இரத்தம் இந்த நாட்டில் இல்லை. சகல இரத்தமும் ஒன்றட கலந்துவைதான்.
இங்கு உரையாற்றி இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்