பிரதான செய்திகள்

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆயுதங்கள் மீட்பு! புலிகளுடையதா?

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக வாழை தோட்டத்தில் இருந்து ஆயுதத்தொகுதி ஒன்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஆலய வளாக வாழை தோட்டத்தில் பொலித்தீன் உறையில் இடப்பட்டவாறு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து கோவில் பராமரிப்பாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆலய பரிபாலன தலைவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு சோதனையை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, சோதனையின் போது உரப்பையில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு, ரம்போ கோடாரி, மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸாரும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் 6 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Editor

ஹக்கீம் கோடிகளை வாங்கிகொண்டு சமூகத்திற்கு பொய் சொல்லுகின்றார்

wpengine

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

wpengine