பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு கோத்தபாய ஆதரவு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையிலான வியத் மக அமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாம் பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

வியத் மக அமைப்பின் பணிப்பாளர் சபை அதிகார பூர்வமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைப் பிரகடன நிகழ்வில் வியத் மக அமைப்பும் பங்கேற்கவுள்ளது.

அரசியல் விவகாரங்களில் இறங்கப் போவதில்லை என பல தடவைகள் கோத்தபாய ராஜபக்ச மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கிய சஜித், முன்னால் அமைச்சர்

wpengine

மன்னார் பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு வந்த மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

wpengine

பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

wpengine